பாபர் மஸ்ஜீதை அதே இடத்தில் கட்ட வேண்டும்..! மஜக போராட்டத்தில் திருமுருகன் காந்தி எழுச்சியுரை…!!

image

image

image

திருவள்ளூர். டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்திய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் பாபர் மஸ்ஜீத் இடிப்பு ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் இழிவு என்றும், இனி பாபர் மஸ்ஜீத் மீட்பதில் உச்சநீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும்.டிசம்பர்6 நிகழ்வை சட்டம் இயற்றிய அம்பேத்கரின் மறைவோடு நீதியை புதைத்துவிட வேண்டாமென்று கூறினார்.

மஜக கொள்கை விளக்க அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் பாஸிச சக்திகளுக்கு சவால்விடும் வகையில் உரையாற்றினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போராட்ட களத்திற்கு வந்த தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் டிசம்பர்-6ல் பங்குபெற்று நான் உரையாற்றுவது எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும் தோள் கொடுத்து நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இந்தியர்கள் என்பதை நாடறிய உணர்த்துவோம் என்றார்.

மேலும் பாபர் மஸ்ஜீத் இடத்தை அதே இடத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்லாமல் சர்ச்சார் கமிட்டியின் இட ஒதுக்கீடு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இந்த நாட்டில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் சாத்தியப்பட்டது என்று சமூக நல்லிணக்கத்தை பறை சாற்றும் பல்வேறு அறிவு சார்ந்த கருத்துகளை பதிவு செய்தார்.

ஆவடி நகரத்தின் மக்கள் கூடும் பகுதியில் நடைப்பெற்ற  இப்போராட்டத்தை பல்வேறு போக்குவரத்து இடைஞ்சல்களுக்கு மத்தியில் மக்கள் ஆங்காங்கே குழுவாக நின்று கொண்டு உரைகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், துணைச்செயலாளர்கள் பக்ருதீன், மதுரவாயல் சுலைமான், மாணவர் இந்தியா கரிமுல்லா மற்றும் ஆவடி நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, நகர பொருளாளர் நாகூர் மீரான், தேவகாந்தி பாபு, சுல்தான் இஸ்ஹாக், பூவை நகர செயலாளர் யாசர் அரபாத் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவள்ளூர்_மேற்கு
06.12.17