திண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்..! கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.!!

image

image

image

image

திண்டுக்கல்.டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் மத்திய அரசை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி வழங்கபடாததை கண்டித்தும், லிபரான் அறிக்கையின் படி தண்டனை வழங்கக்கோரியும்,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை11:30 மணியலவில்
மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமை ஏற்று இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையை எடுத்து கூறினார்.

இதில் கண்டன உரையாற்ற வருகைபுரிந்த மாநில நிர்வாகிகள் மண்ணை செல்லச்சாமி மற்றும் திண்டுக்கல் M.அன்சாரி இருவரில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி அவர்கள்
கூறும்போது பாபர் மசூதியின் வரலாற்றை பற்றியும் அது யாரால் கட்டப்பட்டது என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பார்வையாளர்கள் வியக்கும் வகையில் கண்டன உரையாற்றினார்.

இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்துக்கு சிறப்புரை ஆற்ற வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பாபர் மசூதி வழக்கில் முஸ்லீம்களுக்கு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வறுவதை சுட்டிக்காட்டி நியாயமான நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஒயாது என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்க்கு தடை விதித்த போது அந்த தடைக்கு எதிராக என் பாசமிகு சகோதரன் அன்சாரி அறிவிப்பை ஏற்று முதன்முதலில்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி காட்டியதை சுற்றிக்காட்டி, வரும் பொங்கல் திருநாளன்று மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை இந்த மூன்று கட்சிகளும் இணைந்து மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவேம் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்களும் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவுசெய்தனர்.

இப்போராட்டத்தில் M.A.S.உசேன் முகம்மது அவர்கள் தொகுத்து வழங்க இறுதியாக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா நன்றியுரை ஆற்றினார்.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்
06/12/2017