நாகை தெற்கு மஜக சார்பில் இரயில் நிலைய முற்றுகை போர். .! கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி சகோதரர்கள், மஜக சகோதரர்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

நாகை. டிச.06., பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடைப்பெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்த பொதுமக்களும, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், பிரநிதிகளும் பங்கேற்றனர்.  நாகை தெற்கு மாவட்ட மஜக […]

image

image

image

image

நாகை. டிச.06., பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடைப்பெற்றது.

இதில் பல்வேறு மதங்களை சேர்ந்த பொதுமக்களும, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், பிரநிதிகளும் பங்கேற்றனர். 

நாகை தெற்கு மாவட்ட மஜக சார்பில் நாகை இரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராடத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் அவர்கள் தலைமை வகித்தார்.

மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மௌலவி. ஜெ.எஸ். ரிஃபாயி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்டுபாட்டுக்குழு உறுப்பினர் பாண்டியன், திராவிட கழக மாவட்ட செயலாளர் புபேஸ் குப்தா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன்,  நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிவானந்தம், அப்துல் கலாம் பேரியக்கம் நிறுவனர் பாரதி.செந்தமிழன் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்.

இப்போராட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ஹமீது ஜெகபர், ஷேக் மன்சூர், மாவட்ட அணி செயலாளர்கள் பிஸ்மி.யூசுப், அல்லாபிச்சை, சாகுல் ஹமீது, ஆரிஃப், ரெக்ஸ்.சுல்தான், அப்துல் அஜீஸ், அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கட்சி சகோதரர்கள் ஆண்கள், பெண்கள் உட்பட சுமார்  800-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_தெற்கு
06/12/2017

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter