ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு மஜக முன்னிலையில் உதவி பொருட்கள் விநியோகம்..!

சென்னை.டிச.01., சவுதிவாழ் தமிழ்  சொந்தங்களால் சென்னையில்  உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு  தேவையான பேட், செருப்புகள், போன்ற பல தரப்பட்ட பொருட்களை  வாங்கி அதை மனிதநேய  ஜனநாயக கட்சியின் சார்பாக  சென்னையில்  உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு  பிரித்து கொடுக்கும் படி (தாம்பரம் தாரிக்) அவர்களை தொடர்பு கொண்டு சவுதிவாழ் தமிழ் சொந்தங்கள் கேட்டு கொண்டார்கள். அதன் அடிப்படையில்  நேற்று முன்தினம் (29.11.2017) மாலை பொருட்கள் […]

image

image

image

சென்னை.டிச.01., சவுதிவாழ் தமிழ்  சொந்தங்களால் சென்னையில்  உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு  தேவையான பேட், செருப்புகள், போன்ற பல தரப்பட்ட பொருட்களை  வாங்கி அதை மனிதநேய  ஜனநாயக கட்சியின் சார்பாக  சென்னையில்  உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு  பிரித்து கொடுக்கும் படி (தாம்பரம் தாரிக்) அவர்களை தொடர்பு கொண்டு சவுதிவாழ் தமிழ் சொந்தங்கள்
கேட்டு கொண்டார்கள்.

அதன் அடிப்படையில்  நேற்று முன்தினம் (29.11.2017) மாலை பொருட்கள் அனைத்தும்  மனிதநேய ஜனநாயக கட்சி  நிர்வாகிகளிடம் வந்து சேர்ந்தது. அதை அமானிதமாக பெற்று கொண்ட மஜக நிர்வாகிகள். 

நேற்று (30.11.2017) ரோகிங்கியா இஸ்லாமியர்கள்   இருக்கும் கேளம்பாக்கத்தில் மஜக நிர்வாகிகளை  தொடர்பு கொண்டு  அந்த பொருட்களை  பிரித்து கொடுக்க  வேண்டும் என்று அழைக்கும் போது  மஜக நிர்வாகிகள்  சொன்ன தகவல் கேளம்பாக்கத்தில் இருக்கும் மக்களுக்கு அனைத்து மக்களும் உதவி கரம்  நீட்டுகிறார்கள். 

ஆனால்   கேளம்பாக்கத்தை  தாண்டி சுமார் 8  கிலோமீட்டர் தள்ளி  இருக்கும்  திருப்போரூர் என்ற  இடத்திலும்  ரோகிங்கியா இஸ்லாமியர்கள் டென்ட் போட்டு தங்கி  ரோடுகளில் இருக்கும் பிளாஸ்டிக்  பாட்டில்  கவர் போன்றவற்றை  பெருக்கி
அதை எடைக்கு போட்டு அதில் வரும்  வருமானத்தை  வைத்துதான் குடும்பத்தை நடத்துகிறார்கள்.  அவர்களுக்கு யாரும்  முன்வந்து உதவி  செய்வதில்லை என்ற  தகவல்   சொன்னார்கள்.

அதனடிப்படையில்  மனிதநேய ஜனநாயக  கட்சியிடம் வந்த  அமானித  பொருட்களை தேவை உள்ளவர்களிடம்  கொண்டு சேர்க்கும் விதமாக  திருப்போரூரில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு  அமானிதமாக நம்மிடம் வந்த பொருட்களை பிரித்து  கொடுக்கப்பட்டு விட்டது.

இந் நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் யூசுப், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தாம்பரம் தாரிக், மாநில இளைஞரனி துணைச் செயலாளர் கேளம்பாக்கம் அன்வர் பாஷா, காஞ்சி தெற்கு  மாவட்ட மருத்துவ அணி செயலாளர் திருப்போரூர் முஹம்மது ரபிக், மற்றும் முஹம்மது இலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறைவன் நாடினால் சென்னையில்  இருக்கும் ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு உதவி செய்ய  விரும்புபவர்கள் கிழே  உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி  நிர்வாகிகளை தொடர்பு கொண்டு     உதவி செய்ய முன்வரலாம்.

இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக  அனைத்தையும் இழந்து சொந்த நாட்டைவிட்டு  வந்து ரோடுகளில் குப்பை பொறுக்கும் நமது உறவுகளுக்கு  உதவுவோம்.

மண்ணிவாக்கம்  யூசுப் 9551572112,

கேளம்பாக்கம் அன்வர் பாஷா 9952038767,

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
30.11.2017

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter