நடிகர் விஜய்க்கு குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது..! மாணவர் இந்தியா

image

image

image

image

சென்னை.நவ.15., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பாக  அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ் தற்கொலையில் ஆதாரங்கள் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசையும், காவல்துறையும் கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில், தோழர் அன்புவேந்தன், ஃபெலிக்ஸ், திருமுருகன் காந்தி, இயக்குனர் பா.ரஞ்சித் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, தமிழ்நாடு மாணவர் முன்னணி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக கண்டன உரையாற்றிய மாநில செயலாளர் அஸாருதீன் சோற்றுக்காக மதம் மாறவில்லை சுய கௌரவத்திற்காக மாறினேன் என்று மாணவர் வாக்குமூலம் கொடுத்து தற்கொலை செய்யும் அளவுக்கு கல்லூரி பேராசியர்களின் மனதில் மதவெறி புகுந்துள்ளது ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறினார்.

மேலும் இப்படி கல்வியிலும், ஆசிரியர்களும் ஒரு சேர்ந்து குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக செயல்படுவது எஜமான் மோடியின் திருப்தியை பெற்று பதவி சுகம் அடைய செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிவதாக குற்றம் சாட்டினார்.

ஜோசப் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது என்று பதிவு செய்தார். இதற்குள் இருக்கும் மத அரசியலை புரிந்துக் கொண்டு மாணவர்கள் போராட வேண்டுமென்றும், ஜோயல் பிரகாஷின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் ரவிக்குமார் மீது உயர்கல்வித்துறையும், மாநில அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர் இநந்தியாவும், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின்  கூட்டமைப்பு போராடும் என்றும் கூறினார்.

செய்தி தொகுப்பு ;
#ஊடக_பிரிவு_மாணவர்_இந்தியா