ஈகையும், அன்பும் ஓங்கட்டும் ! மஜக ரமலான் வாழ்த்து !

image

( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி)

முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது .

சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது .

உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் .

இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் .

உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் .

M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*