முகமது ரிஃபாத் ஷாரூக்…! தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தம்பி !

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை)

விலை குறைந்த கையடக்க செயற்கை கோளை தயாரித்து உலக அளவில் இந்தியாவுக்கும் , தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் பள்ளப்பட்டியை சேர்ந்த முகம்மது ரிஃபாத் ஷாரூக் என்ற மாணவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து , இளம் வயதில் தந்தையை இழந்து , +2 தேர்வில் வெறும் 750 மதிப்பெண்களே எடுத்துள்ள நிலையில் , இம்மாணவர் நிகழ்த்திய இச்சாதனை பெரும் பாராட்டுக்குரியது . அறிவுக்கும் , மதிப்பெண்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் , அறிவு என்பது வர்க்கம் சார்ந்து வருவதில்லை என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது .

அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம் உலக அளவில் 8 ஆயிரம் மாணவர்களை  சோதித்து இவரை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

இச்செய்தியை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் O.S.மணியன்  அவர்களுக்கும் , இம்மாணவனுக்கு 10 லட்சம் ரூபாயை ஊக்கப்பரிசாக அறிவித்த முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டுக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.06.2017