தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஜமால் முகமது கல்லூரியில் உற்சாக வரவேற்பு…

image

image

image

image

புகழ்பெற்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், இன்று (21-3-2017) வரதட்சணைக்கு எதிராக மாணவ-மாணவிகள் நடத்திய நிகழ்ச்சியில் #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA கலந்து கொண்டு உற்சாக உரையாற்றினார்.

பறை முழக்கம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. காணொளி காட்சி தொகுப்பு  பிறகு “எதிரொலி” நூல் வெளியீடு புதுமையான கலை நிகழ்வோடு நடைப்பெற்றது.விரசம் இல்லாமல் நாகரீகத்தோடு மாணவிகளின் நிகழ்ச்சி அமைப்பு அரங்கேறியது.

மாணவிகள் எழுந்து வரதட்சணைக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.

பிறகு 1500 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மத்தியில், அவர்களின் ஆரவாரத்திற்க்கிடையே #தமிமுன்_அன்சாரி_MLA உரையாற்றினார். அவருக்கு முன்னுரை கொடுத்த பேராசிரியர்கள் அவரை பேச அழைத்த போது மாணவிகள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

கவிதை, இலக்கியம், தன்னம்பிக்கை, முன்னேற்றம், வரதட்சணை கொடுமைக்கு எதிரான முழக்கம், பெண்ணியம், கல்லூரி வாழ்க்கை என படு சுவாரசியமாக அவரது உரை அனைவரையும் கவர்ந்தது, கைதட்டல் அரங்கை அலற வைத்தது.

பிறகு 7 மணிக்கு விடுதி மாணவர்களுக்கு மத்தியில், #தமிமுன்_அன்சாரி_MLA பேருரையை நிகழ்த்தினார். அவரை இன்றைய இளைஞர்களின் எழுச்சி நாயகர் என்று மாணவர்கள் அறிமுகப்படுத்தி பேச அழைத்த போது மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று அதன் சுவையை அனுபவப்பூர்வமாக விவாரித்த போது மாணவர்கள் உற்சாகம் கொண்டனர்.

அவரது உரையில்,கவித்துவம், ஆளுமை பண்புகள்,போராட்டம், நல்லிணக்கம், கல்லூரி அனுபவங்கள் என உரை முழுதும் புதுமையாக இருந்தது. அதை பேராசிரியர்கள் உற்சாகத்துடன் பாராட்டினர்.

#தமிமுன்_அன்சாரி_MLA, மேடையில் இருந்து வெளியே வரும்போது மாணவர்கள், சுற்றிவளைத்து “செல்பி” புகைப்படம் எடுக்க போட்டிப் போட்டனர்.
அவரது சட்டமன்ற உரைகளுக்கு மாணவர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

JMCக்கு வருகை தந்த தமிமுன் அன்சாரி, ஜமாலியன்களுடன் இரண்டர கலந்து விட்டார் எனும் அளவிற்கு நிகழ்ச்சிகள் அமைந்தது.

JMC மாணவர்கள் முன்னெடுத்த வரதட்சணை எதிர்ப்பு உறுதி மொழியை பாராட்டியவர், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

செய்தி தொகுப்பு,

#மாணவர்_குழு
#ஜமால்_முகமது_கல்லூரி
#திருச்சி.
 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.