பட்டுக்கோட்டை நகரத்தில் மஜக  உதயம்.

தஞ்சை.செப்.07., தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் மனித நேய ஜனநாயக கட்சியின் கிளை அமைக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி.எஸ்.எம்.எ.சலாம் தலைமையிலும், மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை, செயல்பாடு குறித்து மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் விளக்கி பேசினார்கள்.

இதில் சுமார் 25 சகோதரர்கள் உறுப்பினராக இணைந்து கொண்டனர். மேலும் இதில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை குத்துபுதீன் மாவட்ட இளைஞரணி செயலாளர் மரக்காவலசை ராஜ் முகமது, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள், கறம்பக்குடி ஜான் முகமது, ரெங்கசாமி , அதிரை நகர பொறுப்பு குழு தலைவர் ஸமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.