மஜகவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி)

நம் இந்திய திருநாடு 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வது நம்மையெல்லாம் உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.

எத்தனையோ தடைகளையும், சோதனையான பல நிகழ்வுகளையும் கடந்து நம் நாடு முன்னேறி வருகிறது.

உலகிலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெருமை, நமது எதிர்காலத்தை ஒளிமயமானதாக வைத்திருக்கிறது.

இத்தருணத்தில் நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிர் ஈந்த அனைத்து தியாகிகளையும் நெஞ்சில் சுமந்து , நாட்டின் ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் வளர்த்தெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்

இவண்;

#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி