முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய்க்கு கேரளாவுக்கு, மஜக சார்பில் நிவாரண உதவிகள்! மஜக செயற்குழுவில் முடிவு!

தென்காசி.ஆக.11., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் தென்காசியில் எழுச்சியோடு நடைபெற்றது.

செயற்குழு உறுப்பினர்களை வரவேற்று வரவேற்ப்பு வளைவுகளும், கொடிகளும் அமைக்கப்பட்டு, சுவரொட்டிகளும். காலை 11 மணியளவில் வருகை பதிவு துவங்கியது, மாநில செயலாளர் N.A.தைமியா தலைமையில் தொண்டர் அணியினர் அழைப்பிதழை சரிபார்த்து வருகை பதிவு செய்தனர்.

இச்செயற்குழுவுக்கு அவைத் தலைவர் நாசர் உமரீ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தினார் . அவரை தொடர்ந்து தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் J.S.ரிபாயி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

அவரை தொடர்ந்து செயற்குழுவின் நோக்கம் குறித்து பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நோக்க உரையாற்றி கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயல்பாடுகள் குறித்து கருத்தாய்வை தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS. அலாவுதீன் அவர்கள் வழிநடத்தினார்.

இதில் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பில் ஓராண்டு பணிகள் அறிக்கைகளாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தலைமை வளர்ச்சி குறித்து அவர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டது.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 01 முதல் அக்டோபர் 31 வரை இரு மாதங்களுக்கு தீவிர உறுப்பினர் சேர்ப்பு நடத்துவது எனவும், அதன் வழியாக கட்சிக்கு 5 இலட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்றும், மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்துவது என்றும், இதை முன்னிட்டு 1000 இடங்களில் கொடிகளை ஏற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

கட்சியின் அணிகளை வலிமைப்படுத்தி, அணிகளின் செயற்குழு கூட்டங்களை நடத்துவது என்றும், பிப்ரவரி மாதத்தில் பொதுக்குழுவை கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

#கேரளாவில் மழை-வெள்ளத்தால் #பாதிக்கப்பட்ட_மக்களுக்கு உதவும் வகையில் முதல் கட்டமாக மஜக சார்பில் #10_இலட்சம் ரூபாய்க்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைப்பது என்றும், இதற்காக 17.08.2018 அன்று வெள்ளிக்கிழமை வழிபாட்டுதலங்கள் உட்பட அனைத்து இடத்திலும் துண்டேந்தி வசூல் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கலைஞரின் மறைவுக்கு இரங்கல், ஹஜ் மானியம் 6கோடி ரூபாயை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், திருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம், தமிழ் உணர்வாளர்கள் சீமான், கௌதமன், வேல்முருகன், பாரதிராஜா, அமீர், மணியரசன் உள்ளிட்டோர் மீது காட்டப்படும் நெருக்கடிகளுக்கு கண்டனம்.

காவிரி, கூடங்குளம், பசுமைவழி சாலை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீத்தென் எடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடியவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல், ஒட்டுபதிவு இயந்திரத்திற்கு மாற்றாக வாக்குச்சீட்டுக்கு மாறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா.நாசர் அவர்கள் வாசித்தார்கள்.

இடையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அது போல் கட்சிக்கு தலைமை வளர்ச்சி நிதி வழங்கியதில் முன்னிலை பெற்ற நாகை(தெற்கு) கோவை மாநகர், திருவாரூர் மாவட்டங்களுக்கும், இதில் பங்கேற்று நன்கொடை வசூல் செய்த தஞ்சை மாநகர், தஞ்சை (தெற்கு) , கடலூர் (தெற்கு), ஈரோடு கிழக்கு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதுபோல எல்லா மாவட்டங்களும் வசூல் செய்து தலைமைக்கு வளர்ச்சி நிதியை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அது போல கட்சிக்கு ஒரு பத்திரிக்கையும், சொந்தமாக ஒரு தலைமை அலுவலகமும் உருவாக்குவது இலக்காகவும் தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் எழுச்சியுரையாற்றினார். அவரது உரை தொண்டர்களுக்கு புதுத்தெம்பை அளிக்கும் விதத்தில் அமைந்தது.

நிறைவாக நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மாஸ் ஹாஜா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

உணவு, மண்டபம், வரவேற்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்த நெல்லை மேற்கு மாவட்ட மஜகவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் துணை பொதுச்செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மதுக்கூர் ராவுத்தர்ஷா, ஈரோடு பாரூக், மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுலாப் தீன், மாநில செயலாளர்கள் ராசுதீன், நாச்சிக்குளம் தாஜுதீன் மற்றும் மாநில துணை செயலாளர்கள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை.
11.08.2018