மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..! மஜக தலைவர்கள் பங்கேற்பு..!!

சென்னை.ஜூலை.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கொள்கை விளக்கக் கூட்டம் கடந்த (27/07/2018) வெள்ளிக்கிழமை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பால்பூத் பகுதியில் நடைபெற்றது.

இக்கொள்கை விளக்கக் கூட்டத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் I.இப்ராஹீம் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் S.அன்வர் இப்ராகிம் மற்றும்
மாவட்டத் துணைச் செயலாளர் P.M.சாகுல் ஹமீது அவர்களும் வரவேற்புரை நடத்தினர்.

இக்கூட்டத்தில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா, ஜே.சீனி முஹம்மது, கொள்கை விளக்க பேச்சாளர் ஜே.எஸ் மீரான் அவர்களும் மத்திய அரசுக்கு எதிராகவும், நாட்டில் நடக்கும் பாசிஸ அரசியல் குறித்தும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

கொள்கை விளக்க கூட்டத்தில் இறுதியாக பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உடல்நிலை பூரண குணமடைந்து சீக்கிரம் தமிழக மக்கள் மத்தியில் ” என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே ” என்ற வார்த்தை கேட்க பிரார்த்தனை செய்கிறோம், மற்றும் மத்திய பிஜேபி அரசு கபட நாடகத்தை பற்றி தெளிவாக எழுச்சி உரையில் கனத்த குரலுடன் எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முகமது தாரிக், தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அப்துல் காதர், தென் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் காதர் ஷெரிப் , தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்துல் கையூம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், வடசென்னை மாவட்ட செயலாளர் அன்வர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் பக்ருதின், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சையது அபுதாஹிர், மண்ணிவாக்கம் யூசுப், மாவட்ட இளைஞரணி முகமது கனி, மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் கனி, மாவட்ட வர்த்தக அணி ஜலீல், வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரசாக், காஞ்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன், அண்ணா நகர் பகுதி செயலாளர் நாகூர்கனி அண்ணா நகர் பகுதி பொருளாளர் நெல்லை முகம்மது கனி அண்ணா நகர் பகுதி துணைச் செயலாளர் அப்துல் ரஹீம், முகமது ஜின்னா, பருக்கான், முகமது சபீர் மற்றும் பகுதி, கிளை, வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_மேற்கு
28.07.2018