கத்தார் MKPயின்  முக்கிய அறிவிப்பு..!

கத்தார்.மே.12., கத்தாரில் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) என்பவர் கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரணதருவாயிலிருந்துள்ளது உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு கத்தார் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரணையை தொடங்கச்சொல்லி அவரின் நண்பர்கள் மற்றும் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தினர்.

கத்தார் #மனிதநேய_கலாச்சார_பேரவை-யின் சகோதரர்கள் இறந்தவரின் முதழாலியை கண்டு அவரின் உதவியோடு அனைத்தையும் தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.

இதுவரை களத்தில் நின்று ஏறக்குறைய அணைத்து வேலைகளும் முடித்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவரது உடல் இறைவனின் உதவியோடு மதுரை விமான நிலையம் வந்து சேரும்.

இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால் சில கட்சியினர் தங்கள் அரசியல் லாபத்திற்காக தாங்கள் தான் இதை செய்வது போல் முகநூல் மற்றும் நாளிதழ் தொழைக்காட்சிகளில் பதிவிட்டு வருகின்றனர்.

#தயவு_செய்து_இறந்தவர்_உடலை வைத்து அரசியல்செய்ய வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு : இளங்கோவுடைய இறப்பு சான்றிதழ் முதல் கத்தார் காவல் துறை கிளிரன்ஸ், இங்கேருந்து கொண்டு செல்லும் நபர், ஊரில் உடலை பெற்றுக்கொள்ளும் நபர் வரையிலான நகலை பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

தகவல்;
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MKP_கத்தார்
12/05/2018