பழனிபாபா நூல் வெளியீட்டு விழா..!  மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

சென்னை.பிப்.26., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் “பெருங்கனவு” பழனி பாபா வாழ்வும் போரட்டாமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை 5.00 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்..
பழனிபாபா இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் போராடவில்லை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அனைத்து தமிழின மக்களுக்காகவும் போராடினார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு வலுவாக குரல் கொடுத்தார், பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை வாணியம்பாடியில் நடத்தினார்.

பழனி பாபா மரணிக்கும் காலத்தில் ஜிகாத் கமிட்டியை சமுதாய அமைப்பாக மாற்றி விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியை தொடங்க விரும்பினார். அவர் விரும்பியதை தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது என்று குறிபிட்டார்கள்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூலை வெளியிட அதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்று கொண்டார்.

பல்வேறு இயங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இக்பால், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை.
25.02.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*