நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் ! நாகூரில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

image

நாகை. பிப்.11., இன்று நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் ( MJTS ) நாகை (தெ) மாவட்ட செயலாளர் அல்லா பிச்சை அவர்களின் மகள் திருமணத்தில் பங்கேற்று மஜக செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசிய உரையின் சுருக்கம்
பின்வருமாறு:-

நாகூர் மக்கள் எனக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்துள்ளார்கள். அதனால் சாதி, மதங்களை கடந்து அனைவருக்கும் நான் பணியாற்றுகிறேன். பல நல திட்டங்களை நாகூரில் அமல்படுத்தி வருகிறேன்.

காரைக்கால் – வாஞ்சூரில் அமைந்துள்ள மார்க் துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரி இறக்குமதியால்  நாகூர், பட்டிணச்சேரி, பனங்குடி பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை முதல் முதலில் நான் தான் சட்டமன்றத்தில் பேசினேன் என்பதை அனைவரும் அறிவர்.

விதிகளை மீறி செயல்படும் மார்க் துறைமுகத்திற்கு எதிராக, நிலக்கரி இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய கோரி விரைவில் நாகூரில் மஜக சார்பாக பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்படும்.

அது தமிழ்நாடு, புதுச்சேரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். அதில் தமிழகத்தின் பிரபல தலைவர்கள் பங்கேற்பார்கள்.

விரிவான ஆலோசனைக்கு பிறகு, அது எத்தகைய போராட்டம் என்பது குறித்து, நாகையில் பிப்- 28 அன்று நடைபெறும் சமூக நீதி மீட்பு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

இது தவிர சட்டரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் எங்களது அழுத்தங்களும் தொடரும் என்றும் பேசினார்.

அவரது உரையை கேட்ட நாகூர் மக்கள், அவருக்கு கை கொடுத்து, நன்றிகளையும், வாழ்த்துக்களையும் கூறினர்.
கட்சி, இயக்க வேறுபாடுகளை கடந்து அதில் பங்கேற்போம் என்றும் கூறினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
11.02.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.