மலேசியா

மலேசியா

image

மனிதநேய ஜனநாயக கட்சி ஓராண்டை கடந்த நிலையில் பல வரலாற்று நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது. பதிவு செய்யப்படாத நிலையிலேயே, அரசியல் அங்கீகாரத்தையும், தேர்தல் வெற்றிகளையும் பெற்ற கட்சி தமிழகத்தில் மஜகவாகத்தான் இருக்கக் கூடும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தற்போது நெடிய உழைப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஈர நிலத்தில் விழுந்திருக்கும் விதையான மஜக, தற்போது வேலி அமைத்து வீரியமாக புறப்பட்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என மஜகவின் எழுச்சிமிக்க பயணத்தில் இணைந்திருப்போருக்கு இது ஒரு வசந்தகால செய்தியாகும்.

கட்சியை பதிவு செய்வதில் முனைப்புக் காட்டி பணியாற்றிய தலைமை நிர்வாகிகள் S.S.ஹாரூண் ரஷீத், மெளலா. நாசர், N.தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா ஆகியோருக்கும், ஜாவித், ஷமீம், அணீஸ் ஆகிய துடிப்புமிக்க இளம் சகோதரர்களுக்கும், இப்பணியில் உழைத்த இதர தலைமை நிர்வாகிகளுக்கும் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி ஜாவித் பலமுறை டெல்லிக்கு சென்று இப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இறைவன் நமது பணிகளை அங்கீகரிக்க பிராத்திப்போம்!

அன்புடன்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
08.06.2017

image

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு)

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த நான்கு நாடுகளும் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. 

ஈரானின் புதிய அதிபர் ஹஸன் ரவுஹானியை கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல்தானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை ஒரு குற்றமாக அந்நாடுகள் கூறியுள்ளன.

இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தந்திரங்களும், திட்டங்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை. கத்தார் அமெரிக்காவுடன் ஒரு இடைவெளியை கடைப்பிடிக்கிறது.

இது தவிர எகிப்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மொர்ஸி அவர்களின் ஆட்சி கவிழ்ப்பை அந்த நான்கு நாடுகளும் ஆதரித்தன. அமெரிக்காவும் ஆதரித்தது. ஆனால் கத்தார் எதிர்த்ததையும் இங்கே கவனிக்க வேண்டும் .

கத்தார், பாலஸ்தீன போராட்டத்திற்கு துருக்கியை போலவே குறிப்பாக ஹமாஸ் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தரும் நாடு .

மேலும் CNN, BBC  ஊடகங்களுக்கு மாற்றாக அல்ஜெஸிரா எனும் வலிமையான ஊடகத்தை கத்தார் வழிநடத்தி வருவது அமெரிக்காவின் கண்களை உறுத்திவந்தது.  இந்நிலையில் ஈரானுடன் ஒரு சுமூக உறவை, கத்தார் மேற்கொண்டது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.
வளைகுடாவில் நிரந்தர அமைதி வேண்டுமெனில் , அரபு மொழி பேசும் GCC நாடுகளும் , பெர்ஸிய மொழி பேசும் மக்களைக் கொண்ட ஈரானும் நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் விருப்பமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், கத்தாருடன் சவுதி உள்ளிட்ட நான்கு GCC நாடுகளும் ராஜ்ய உறவுகளை துண்டித்ததோடு மட்டுமின்றி வான் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தையும் நிறுத்தியது வளைகுடா வாழ் மக்களிடமும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் ஏற்படுத்திய தடையால், கத்தாரில் உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது மனிதாபிமானமற்ற அணுகுமுறை என்பதில் ஐயமில்லை .

இஸ்ரேலை எதிர்ப்பதிலும் , அமெரிக்காவுடன் சரணாகதி ஆவதை தவிர்ப்பதிலும் கத்தார் கடைப்பிடித்து வந்த அரசியல் நிலைப்பாடு அதற்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இன்று கத்தார் நெருக்கடியை சந்தித்தாலும், சவுதி, எகிப்து, அமீரகம், பஹ்ரைன் நாடுகளை விட பொருளாதாரத்தில் வலுவாக உள்ளது. தற்போதைய பங்கு சந்தை வீழ்ச்சியை சரிசெய்யும் பொருளாதார பின்னணி அதற்கு இருக்கிறது.

இன்று வளைகுடா நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட பணக்கார நாடு என்ற அந்தஸ்தை கத்தார் பெற்றிருக்கிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தையே பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறது. உலகின் கவனம் கத்தாரின் பக்கம் திரும்பியதை மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உலகிலேயே 3வது எண்ணெய் வளம்மிக்க நாடு கத்தார்.  உயர்தர எரிவாயு கத்தாரில்தான் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் உபயோகத்திலிருந்து எரிவாயு பயன்பாட்டுக்கு உலகம் மாறி வரும் நிலையில், அமெரிக்காவின் வழக்கமான சூழ்ச்சி கத்தாரை இப்போது குறி வைத்திருக்கிறது என சர்வதேச அறிவுஜீவிகள் கூறுகிறார்கள் .

திடீரென்று கத்தார் மீது   ‘தீவிரவாத பழி’ திட்டமிட்டு சுமத்தப்படுவதாக அந்நாட்டு மக்கள் குமுறுகின்றனர்.

அதாவது முன்பு ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி அரபு நாடுகளை அணிதிரட்டியது. சதாமைக் கொன்றது. பிறகு ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் ஏதுமில்லை என்றது. இப்போது கத்தார் விசயத்திலும் அதுதான் நடக்கிறது.

அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் சவுதி வந்து சென்ற பிறகு மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் இக்குழப்பங்களுக்கு பின்னணியில் அமெரிக்காவின் CIA, இஸ்ரேலிய மொசாத் உளவு அமைப்புகளின் கூட்டுசதி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதிற்கில்லை.

கத்தாருக்கு எதிராக நான்கு அரபு நாடுகளையும் அமெரிக்கா தூண்டி விடுவதாகவும், அரபு – GCC ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதாகவும் அரபுலக ராஜதந்தீரிகள் சந்தேகிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 1 லட்சம் தமிழர்கள் உள்ளிட்ட 6 லட்சத்திற்குமேற்பட்ட மக்கள் கத்தாரில் தொழில் மற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களால் இந்தியாவுக்கு அந்நிய செலாவணி வருவாய் கிடைத்து வருகிறது . அதற்கும் ஆபத்து ஏற்படும் போல் தெரிகிறது.

இந்த அரசியல்  நெருக்கடிகளால், சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்திருக்கிறது. இதை வளரும் நாடுகள் விரும்பவில்லை.

இச்சூழலில் சவுதி உள்ளிட்ட நான்கு அரபு நாடுகளுக்கும் , கத்தாருக்கும் இடையில் சுமூக உறவை ஏற்படுத்த இரு தரப்புக்கும் பொதுவாக இருக்கும் சீனா, துருக்கி, குவைத், மலேசியா போன்ற நாடுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அரபு நாடுகள் ஒன்றுசேர்ந்து ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டிய இத்தருணத்தில், தங்களுக்குள் மோதிக்கொள்வது புத்திசாலித்தனம் ஆகாது.

இவ்விசயத்தில் சவுதி மன்னர் சல்மான் அவர்கள் பெருந்தன்மையோடும், நிதானத்தோடும் செயல்படவேண்டும். OIC நாடுகளின் கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு சுமூக தீர்வு ஏற்பட வேண்டும்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
07.06.2017

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தற்போது இறையருளால் அவரது உடல் நலம் மேம்பட்டு, மருத்துவமனையிலிருந்து அவர் விடுதிக்கு வந்துவிட்டார்.
இரண்டு வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அலைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

அவரிடம் பேச வேண்டிய கட்சி தொடர்பான செய்திகள் எதுவாயினும் கட்சியின் பொருளாளர்  SS.ஹாரூண்
ரசீது அவர்களை  தொடர்புக்கொள்ளவும்.

தேவையேற்படின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லான நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி ஆகியோரையும் தொடர்புக் கொள்ளுமாறும், தொகுதி சம்மந்தப்பட்ட விவகாரங்களுக்கு அவரது தனிச்செயலாளர் முபாரக் (9092020923) சட்டமன்ற உறுப்பினர் அலுவலக செயலாளர் சம்பத் (9361771714) ஆகியோரை தொடர்புக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாரகள்.

இவண்,
மஜக தலைமையகம்
22.04.2017

திருவாரூர் மாவட்டத்தில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பல்வேறு மட்ட பொறுப்புகளுக்கு கீழ் கன்டவாறு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

திருவாரூர் மாவட்ட இளைஞரணி
துணை செயலாளர்கள்:

1* A.ஜபுருல்லாஹ்
கூத்தாநல்லூர்
9952517421

2* K.முகம்மது கனி
பொதக்குடி
9715041122

3* S.தாஜுதீன்
கட்டிமேடு
9965373539

மாவட்ட வர்த்தக அணி
துணை செயலாளர்:
A.முகம்மது பைசல்
கட்டிமேடு
9943968441

மாவட்ட தொழிற்நுட்ப அணி
துணை செயலாளர்
S.முகம்மது ஆசிப்
கட்டிமேடு
9942827675

திருவாரூர் ஒன்றிய செயலாளர்
M.ஹாஜா மைதீன்
அடியக்கமங்கலம்
9500309007

நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்
S.M.H.ஜியாவுதீன
பொதக்குடி
7845786660

குடவாசல் ஒன்றிய செயலாளர்
J.அப்துல் கபூர்
பொதக்குடி
9600601553

மன்னார்குடி ஒன்றிய
துணை செயலாளர்
H.தாரிக் முகம்மது
பூதமங்கலம்
9943912289

திருவாரூர் நகர செயலாளர்
N.சித்திக் முகம்மது
திருவாரூர்
8870595634

மனிதநேய ஜனநாயக கட்சியினர்
மேற்கன்ட நிர்வாகிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொது செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
22/03/2017.

image

image

சிங்கப்பூர்.மார்ச்.07., சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) ஏற்பாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி முஸ்தபா சென்டரின் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது . சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் செயலாளர் Y.செய்யது யூசுப் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் .

இதில் சிங்கப்பூரில் செயல்படும் கடையநல்லூர் , தென்காசி , கீழக்கரை , நாகூர் , முத்துப்பேட்டை , பொதக்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர் .

தங்கள் ஊரை சேர்ந்தவர் என்ற பாச உணர்வோடு சிங்கப்பூர் வாழ் தோப்புத்துறை வட்டார மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து பாராட்டினர் .

இதில் சமூக ஆர்வலர்கள் , தொழிலதிபர்கள் , ஊடகத்துறையினர் என பலரும் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் அவர்கள் நாகையின் MLA ஆனதற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

தகவல்

மனிதநேய கலாச்சாரப் பேரவை. #MJK_IT_WING
சிங்கப்பூர் மண்டலம்
07.03.2017

image

image

image

சிங்கப்பூரில் இன்று (06.03.2017) கவிமாலை சார்பில் ‘ நானும் – தமிழும் ’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்ச்சி ஆனந்தபவனில் நடைபெற்றது .

தமிழகத்திலிருந்து வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழச்சி.தங்கபாண்டியன் , பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உரையாற்றினர் .

நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்மொழி வளர்ச்சி , இலக்கியம் , கவிதை ஆகியன குறித்து கேள்வி – பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது .

நேயர்களின் கேள்விகளுக்கு மூவரும் பதிலளித்தனர் . உற்சாகம் , நகைச்சுவை , கிண்டல் , கைத்தட்டல் என நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை தோழர் . இறைமதி ஒருங்கிணைத்தார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

விடுமுறை நாள் அல்லாத திங்கள்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது .

தகவல் தொழில்நுட்ப அணி (MJK-IT WING)
சிங்கப்பூர் மண்டலம்

image

image

image

image

புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜஹாங்கீர் அவர்களின் “சிறகிருந்தால் போதும்…” நூல் வெளியீட்டு விழா இன்று 05-03-2017 சிங்கப்பூரில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கவிமாலை நடத்திய இந்நிகழ்வில் கோவை PSG கலை கல்லூரியின் முன்னாள் பேராசிரியை #ஜெயந்திஸ்ரீ_பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றார்.

சிங்கப்பூர் தொழில்அதிபர் S.M.அப்துல் ஜலீல், கவிமாலை காப்பாளர் மா.அன்பழகன், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் அல்ஹாஜ் பரியுல்லா, தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தலைவர் அரிகிருஷ்ணன்,  பெண்கூலின் பள்ளிவாசல் நிர்வாகக்குழு துணை தலைவர் அல்ஹாஜ் M.Y.முகம்மது ரபீக், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் மாறன் நாகரத்தினம், கவிஞர் பிச்சனிக்காடு இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்களுக்கு இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு (FIM) தலைவர் நாகூர் கெளஸ் அவர்கள் நிணைவு பரிசை வழங்க, தோப்புத்துறை (TMAS) சங்க தலைவர் தீன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

“மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றிய பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் நாகப்பட்டினத்திற்கும், தென்கிழக்காசியாவிற்கும் இடையில் இருக்கும் வரலாற்று தொடர்புகளையும், நாகப்பட்டினம் தொகுதி மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் செய்த தமிழ் இலக்கிய, இதழியியல் பணிகளையும் ஆதாரங்களுடன் எடுத்துக்கூற அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்துகொண்டே இருந்தது.

தனக்கும் சிங்கப்பூருக்குமான 25 ஆண்டுகால தொடர்பை விவரித்தவர் சிங்கப்பூர் தமிழர்களின் பாராட்டுகளையும் தட்டிச்சென்றார்.

மனிதநேயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும், இயேசு (ஈசா அலை), கெளதம புத்தர் ஆகியோரின் தடங்களிலிருந்தும், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளிலிருந்தும் தனக்கே உரியபாணியில் அழகாக எடுத்துக்கூறி அரங்கை வென்றெடுத்தார்.

அரசியல் சாராத, இலக்கிய-மனிதநேய இதழியியல் சொற்பொழிவாக அவரது உரை அமைந்ததாக அனைவரும் பாராட்டினர்.

தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய கலாச்சாரப் பேரவை
#MKP_IT_WING
சிங்கப்பூர் மண்டலம்

#தமிழக_மீனவர்களின்_நலனுக்காக_பாடுபட்டாவர்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் செய்தி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான E.அஹ்மத் சாஹிப் அவர்கள் இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்திற்குரியது.

கேரளாவின் செல்வாக்கு பெற்ற தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த E.அஹ்மத் அவர்கள், சிறுபான்மை மக்களின் வலிமை மிக்க குரலாய் நாடாளுமன்றத்தில் திகழ்ந்தார். கேரள மக்களின் தேசிய குரலாகவும், பன்னாட்டு அறிவுமிக்க தலைவராகவும் அவர் விளங்கினார்.

கேரளாவில் 1967 முதல் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் பணியாற்றியதோடு, பல்வேறு வாரியங்களுக்கு தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 1991 முதல் தற்போது வரை தொடர்ந்து 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வெளியுறவுத் துறையிலும், ரயில்வே துறையிலும் இணை அமைச்சராகவும் செயல்பட்டார். இந்தியவின் சார்பில் 6 முறை ஐ.நா.வின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை இந்திய ஹஜ் கமிட்டியிலும் பொறுப்பு வகித்துள்ளார்.

அவர் வெளியுறவுத்துறையில் இணை அமைச்சராக இருந்தப் போது, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட போதெல்லாம் அதில் தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்டெடுக்க அரும்பாடுபட்டார்.

தமிழக தலைவர்களோடு நட்பு பாராட்டியவர், தமிழகத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

சிறந்த படிப்பாளியாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் நூல்களையும் எழுதியுள்ளார்.

2014-ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, ‘CERI’ என்ற இந்திய தேர்தல் சீரமைப்பு குழுவினருடன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அவரை சந்தித்து உரையாடினேன். விகிதாச்சார தேர்தல் முறை குறித்து அவர் தெளிவாக கொள்கைகளை வைத்திருந்ததை அப்போது அறிய முடிந்தது.

நீண்ட அரசியல் மற்றும் பொதுவாழ்வு அனுபவம் கொண்ட ஒரு தலைவரை, கேரளா இழந்துள்ளது. இப்ராஹிம் சுலைமான் சேட், குலாம் முகம்மது பனாத்வாலா போன்ற தலைவர்களுக்கு பின் அவர்களது பணிகளை முஸ்லிம் லீக்கின் சார்பில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்த அவரது இழப்பு, இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு இழப்பு என்பதில் ஐயமில்லை.

அவரை இழந்து வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும், கேரளா மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

இவண்;

M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
01.02.17

image

மனிதநேய ஜனநாயக கட்சியின் “புதிய தலைமையகம்” இறைவன் நாடினால் எதிர்வரும் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று திறக்க உள்ளது…

புதிய தலைமையகம் முகவரி : #5/2, லிங்கி செட்டி தெரு,
(ராயபுரம் பிரிட்ஜ் எதிரில்)
மண்ணடி,
சென்னை -600 001

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING)

image

ஜன.20., தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பல நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்திய தூதரகத்துக்கு எதிரே மலேசிய வாழ் தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினார்.

நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்காக மலேசிய வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை போராட்ட குழுவினர் போராட்டத்தில் பங்கேற்கும் மாறு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்குள்ள போராட்ட காரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

கோலாலம்பூரில் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி கூறினார். பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

இப்போராட்டத்தில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ என்.முனியாண்டி, மலேசிய ஆஸ்ரமம் ஒருங்கிணைப்பு தலைவர் அன்பில் தர்மலிங்கம், பிரபல சமூக ஆர்வர்லர் பாத்திமா சஸ்னா,மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ்,மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) கோலாலம்பூர் நகர செயலாளர் ரஜபுதீன்,செயற்குழு உறுப்பினர் ஜாகிர் பிஸ்ட்ரோ,சமூக ஆர்வலர்கள் அப்துல் சலீம்,முஸ்தபா கான்,வேங்கை இப்ராஹீம்,சித்திக் பாசா,நாகை மாவட்ட மஜக துணைச் செயலாளர் தோப்புத்துறை மன்சூர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்திற்கு மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் பின்புலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-Wing)
கோலாலம்பூர்.
20_01-17

Sign In

Reset Your Password

Email Newsletter