வளைகுடா

வளைகுடா

image

image

image

துபாய்.டிச.17., துபை மண்டல மனிதநேய கலாச்சார பேரவை ( MKP) ஹோரல் அன்ஸ் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

துபை மண்டல செயலாளர் யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துபை மண்டல பொருளாளர் லால்பேட்டை சபீக் மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் கட்டிமேடு ஜாகீர், ஹம்தான், காயல் சபீர், அல் கூஸ் பகுதி செயலாளர் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமீரக துணைச் செயலாளர் அப்துல் ரெஜாக், அமீரக ஊடக பிரிவு செயலாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

ஹோரல் அன்ஸ் பகுதி பொறுப்பாளர் பேராவூரணி ஆரிப் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

தகவல்;
#MKP_ ஊடக_பிரிவு
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MKP_துபை_மண்டலம்.
15.12.17

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

மஜகவின் சார்பில் நானும், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அண்ணன் தனியரசு MLA அவர்களும் குமரி மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளையும், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரையும் பார்க்க சென்றிருந்தோம். அங்கே கருணாஸ் அவர்கள் வருவதாக கூறியிருந்தார், ஆனால் கடைசி நேரத்தில் வர இயலாமல் போய்விட்டது.

எங்களோடு வருகை தந்த மஜக சொந்தங்களோடு கடலோர பகுதிகளுக்கு சென்றப் போது, அங்கு நிலவிய கொந்தளிப்புகளை நேரில் கண்டோம்.

எங்கும் துக்கமயமாக இருந்தது, அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. வெவ்வேறு குரல்கள் ஒரே மொழியில் கதறின. அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம்.

தமிழக முதல்வர் உடனடியாக இங்கு வந்து இம்மக்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்; கேரளா அரசு கொடுத்தது போல, இங்கும் 20 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக கொடுக்க வேண்டும்; இறந்த மீனவர்களின் வீட்டுக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்; கடலுக்கு போகாத நாட்களை கணக்கிட்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும், என கோரிக்கைகளை அரசுக்கு வைத்துவிட்டு, உளவுத்துறை அதிகாரிகளிடமும் இதை மேலிடத்தில் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.

எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் விதமாகவும், மீனவர்களின் உணர்வுகளை மதிக்கும் விதத்திலும் முதல்வர் குமரிக்கு வருகை தந்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது ஆறுதல் தருகிறது. முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.

ஆனால், முதல்வர் போராட்டக் களத்திற்கு சென்று, பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், அது அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும்.

அவர் மக்கள் கோபத்துக்கு அஞ்சி தவிர்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பா.ஜ.கவிற்கும், மீனவர்களுக்கும் அங்கு பகிரங்கமாக பனிபோர் நடந்து வரும் நிலையில் எதற்கு வம்பு ? என இப்படி  நடந்துக் கொண்டாரா ? என்ற கேள்வியும் எழுகிறது.

அங்கு சென்ற முதல்வர் அவர்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் மீதும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அது பற்றி அவர் வாய் திறாக்காதது வருத்தம் அளிக்கிறது.

கிருஸ்துமசுக்கு முன்னதாக டிசம்பர் 22 தேதிக்குள், காணாமல் போன 700 மீனவர்களும்  திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை நிறைவேற வேண்டும். இல்லையேல் மீனவ மக்களின் கேள்விகளுக்கும், குமுறல்களுக்கும் யாராலும் பதில் அளிக்க முடியாது. நல்லதே நடக்க பிராத்திப்போம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
14/12/2017.

ரியாத் மண்டலம்  இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல மருத்துவ அணி செயலாளராக சகோ. யூசுப்தீன்அவர்கள் நியமனம் செய்யபடுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
#இஸ்லாமிய_கலாச்சார_பேரவை
#IKP_ரியாத் மண்டலம்
03.12.17

ரியாத் மண்டலம்  இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ரியாத் மண்டல ஆலோசகராக சகோ. அவுலியா முகம்மது அவர்கள் நியமனம் செய்யபடுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
#இஸ்லாமிய_கலாச்சார_பேரவை
#IKP_ரியாத் மண்டலம்
03.12.17

image

கத்தார்.நவ.29.,மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக கடந்த 25.11.2017 அன்று மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணைச் செயலாளர் K.M.பஷீர் அஹமத் தலைமையில் Sanaya 12ல் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை உருவாக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் மண்டல பொருளாளர் ஆயங்குடி யாசீன், மண்டல துணை செயலாளர் சகாப்தீன், மண்டல PRO வாஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மஜக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்களும் கலந்து கொண்டு எதிர்கால செயல் திட்டங்களை விளக்கினார்.

கீழ்கண்ட நிர்வாகிகள் தேந்தெடுக்கப்பட்டனர்.

கிளைச் செயலாளர்:
தாரிக் மதுக்கூர்
+97430939026

கிளை பொருளாளர்:
பாபு மயிலாடுதுறை
+97455349865

கிளை துணைச் செயலாளர்கள்:

ஜியா முத்துப்பேட்டை
+91 9965859538,

அப்துல்லாஹ் அறந்தாங்கி
+97430737838,

உறுப்பினர்கள்:
1.ஜாஃபர் கும்பகோணம்
+97477332120,

2. கலீல் நெல்லை
+97477145666,

3.முஜீப் மயிலாடுதுறை
+ 974 66314204,

4.சர்ஃபுதீன் மயிலாடுதுறை
+974 3015306,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு
கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:

#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை,
#MKP_கத்தார்_மண்டலம்.
29.11.2017

image

image

image

தம்மாம்.நவ.13., கடந்த வெள்ளிகிழமை 10/11/2017 அன்று தம்மாம், மீனா பகுதியில் உள்ள குளோப் மெரின் கம்பெனி கேம்பில் இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி, பொருளாளர் ஹஜ் முஹம்மது, துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

இந்த கூட்டத்தில் அல் மீனா குளோப் மெரின் புதிய கிளை தொடங்க பட்டது. கிளை நிர்வாகிகள் கீழ் கண்டவாறு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார்கள்.

1) கிளை செயலாளர் :
Y.சாகுல் ஹமீது அவர்கள் (கோட்டைபட்டிணம்).

2) பொருளாளர் :
K. முஹம்மது மைதீன் அவர்கள் (தஞ்சாவூர்).

3) துணை செயலாளர்:
முஹம்மது நிஜாம் அவர்கள் (தென்காசி).

4) துணை செயலாளர் :
முஹம்மது ஹனீப் அவர்கள் (மேலப்பாளையம்).

5) துணை செயலாளர் :
K. தமிமுன் அன்சாரி அவர்கள் (மேலப்பாளையம்)

6) துணை செயலாளர் :
K. முஹம்மது சித்திக் அவர்கள் (தஞ்சாவூர்).

புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு மண்டல செயலாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

நிகழ்வுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

#தகவல்;
#IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு
#IKP_IT_WING
12/11/2017

image

image

குவைத்.நவ.10., மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சல்வா கிளை நடத்திய அரசியல் விழிப்புணர்வு கூட்டம் இன்று 10/11/2017 வெள்ளிக்கிழமை மதியம் 1-மணிக்கு கத்தா 10 மஸ்ஜித் வளாகத்தில் கிளை செயளாலர் சகோ. ஏனங்குடி ஹசன் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.சாதிக் அலி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க.

மண்டல மருத்துவ அணி செயளாலர் சகோ.மாயவரம் சபிர் அஹமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய பின் மண்டல மக்கள் தொடர்பு செயளாலர் சகோ.பொதக்குடி சதக்கத்துல்லா அவர்கள் இன்றைய அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ.முசாவுதீன் அவர்கள் இரத்த தானம் விழிப்புணர்வு பற்றி விளக்கி கூறினார்.

கிளையின் செயல்பாடுகள் பற்றி மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகளால் பேசப்பட்டது. இரத்த தானம் முகாம் நிகழ்ச்சி பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தவும் தீர்மானம் ஏற்றப்பட்டு இறுதியாக கிளை பொருளாலர் சகோ.மன்சூர் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்:-
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK_IT_WING
#MKP_குவைத்_மண்டலம்.
55278478-60338005-65510446.

image

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சல்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் இன்று 10/11/2017 வெள்ளிக்கிழமை 1 மணிக்கு (ஜும்ஆவுக்கு பின்) கத்தா 10 மஸ்ஜித் வளாகம் –  சல்வாவில் நடைபெற உள்ளது மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறது.

அழைப்பின் மகிழ்வில்…
#MKP_மனிதநேய_கலாச்சார_பேரவை
(சல்வா கிளை)
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK_IT_WING
#குவைத்_மண்டலம்.

55278478-60338005-65510446.

image

image

image

அபுதாபி.நவ.05,. மனிதநேய கலாச்சாரப் பேரவையின்
அமீரக செயற்குழு கூட்டம் அபுதாபி பனியாஸ் கேம்பில் நடைபெற்றது.

MKP அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரஃப் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைப்பின் எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் மண்டல  செயல்பாடுகள் பற்றியும் மற்றும் தலைமை நிர்வாகிகளை அழைத்து மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிறைவாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை தையுப் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தகவல்:
#MKP_ஊடகபிரிவு
#ஐக்கிய_அரபு_அமீரகம்
04.11.2017

Sign In

Reset Your Password

Email Newsletter