மஜக கர்நாடகா – MJK KARNATAKA

image

வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக),
அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
12.01.18

image

image

image

பெங்களூர்.டிச.28., கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகை தந்த திரு.TTV. தினகரன் MLA அவர்களை  மனிதநேய ஜனநாய கட்சி (மஜக) பெங்களூரு நிர்வாகிகள், மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

திரு.தினகரன் அவர்களுக்கு கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். உடன் மஜக கர்நாடகா பெங்களுரு மாநகர பொருளாளர் சல்மான் துணைச்செயலாளர் A.அக்கிம் சேட் ,  தகவல் தொழில்நுட்பம் அணி துணை  செயலாளர் அந்தோனி தாஸ்  மற்றும் மஜக செயல்வவீரர்கள் உடன் இருந்தனர்.

இச்சந்திப்பில் RK.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இமலாய வெற்றி பெற்றதர்க்கு கர்நாடக மஜக சார்பாக வாழ்த்துக்கள் கூறினர்.

அச்சமயம் திரு TTV.தினகரன் அவர்கள்  வரும் காலங்களில் கர்நாடக மஜக சிறப்பாக செயல்படவும், பெரும் வளர்ச்சி பெறவும் கர்நாடக பெங்களூர் மாநகர செயலாளர் K.M.J.பாபுவிடம் வாழ்த்து கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_KARNATAKA
#MJK_IT_WING
28-12-2017

image

நாகை தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஜமாத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சகோதர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

அவ்வூர்க்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு ஜமாத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சிக்கல், பொராவாச்சேரி  ஊராட்சியில் மஜக கொடியை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, நாகை ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட விவசாயிகள் அணி துணை செயலாளர் ஜலாலூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், மற்றும் தமீஜூதீன், கிளை நிர்வாகிகள் சதாம், சகாபுதீன் உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
26.12.17

image

சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.

இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன், M.தமிமுன் அன்சாரி MLA, கலெக்டர் சுரேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் மற்றும் அதிகாரிகளும், பொது மக்களும், மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.

அதன் பிறகு நம்பியார் நகரில் பஞ்சாயத்தார்கள் சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் பங்கேற்றனர்.

பிறகு, கீச்சாங்குப்பத்தில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அங்கு பள்ளிக் கூடத்தில் நடைப்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17

image

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.மீரான் தானாக முன் வந்து இராஜினாமா செய்ததின் பேரில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த நிலா சாதிக் அவர்களை ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள்  அல்லாபிச்சை, புளியங்குடி ஷாஜகான், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட தொண்டர் அணி செயளாலர் செய்யது அபுதாகிர், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மாஸ் காஜா, புளியங்குடி நகர செயளாலர், புளியங்குடி நகர துணை செயளாலர் ஷேக் முகம்மது, தென்காசி நகர செயலாளர் செய்யது அலி, தென்காசி நகர துணைச் செயலாளர் மைதின் பிச்சை ராசப்பா, தென்காசி நகர பொருளாளர் அம்ஜத் கான், அசன் கனி ஒன் காசி நகர துணை செயலாளர், முகைதீன் தென்காசி நகர மருத்துவ அணி மற்றும் வார்டு நிர்வாகிகள் , மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்.
25.12.17

image

நாகை. டிச.21., 2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வெளியானதும் நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA  அவர்களை பத்தியாளர்கள் சந்தித்து ஸ்பெக்ட்ரம்(2G அலைக்கற்றை) தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதில் அளித்தவர், கடந்த பத்து ஆண்டு காலமாக  இவ்வழக்கு நாடு முழுக்க கூர்ந்து கவனிக்கப்பட்து.

இந்த வழக்கை வைத்து திமுகவையும், திராவிட கட்சிகளையும் ஊழல் பின்னணி கொண்டதாக சித்தரித்து, திராவிட கட்சிகளை அழித்து விடலாம் என்று டெல்லியில் உள்ள சில தீய சக்திகள் திட்டமிட்டார்கள்.

இப்பொழுது தனி நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் திரு.R.ராசா, திருமதி கனிமொழி MP உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்திருக்கிறது. பத்து ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு வழங்க பெற்றிருப்பது வரவேற்க்கதக்கது.

இதில் விடுதலை பெற்றவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின்  சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING.

image

image

பெங்களூரு.டிச.10., இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் மே17 இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் ” தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் ” என்ற தலைப்பில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) கர்நாடக மாநிலம் பெங்களூர் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் கலந்து கொண்ட மஜக பெங்களூரு மாநகர் செயலாளர் KMJ. பாபு அவர்கள் தோழர். திருமுகன் காந்தி அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்தினார்.

இந்நிகழ்வில் மாநகர் பொருளாளர் J.சல்மான், துணை செயலாளர் A.அக்கீம் சேட், தகவல் தொழில்நுட்ப செயலாளர் தன்வீர், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அந்தோனி தாஸ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK_KARNATAKA

image

image

image

image

#மஜக_பெங்களூரு_மாநகர_செயல்வீரர்கள்_கூட்டம்_மாநில_பொருளாளர்_பங்கேற்பு..!

பெங்களூர். டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர செயல்வீரர்கள் கூட்டம் இன்று 02/11/17 ஏர்ப்போர்ட் ரோடு பகுதியில் மாவட்ட செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகர துணை செயலாளர் ஹக்கிம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், மாநகர பொருளாளர் J.சல்மான் முன்னிலைவகிக்க, மாநகர துணைச்செயலாளர் SBS.சாகுல்ஹமீது தொகுப்புரை வழங்க,
இக்கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மவ்லவி J.S.ரிஃபாயி ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.

இதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாபர் மசூதி வரலாறு பற்றியும், மசூதி இடிப்பு நடைபெற்றதை பற்றியும், மகஜவின் போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார்கள்.

மேலும் இந்த டிசம்பர்-6 அன்று இஸ்லாமிய சொந்தங்கள் மட்டுமல்லாது மாற்றுமத சகோதரர்கள், தோழமை கட்சி நிர்வாகிகளையும் அழைத்து போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.

இதில் KMMT மாநில தலைவர் முக்தார் அஹ்மத், திப்பு கிராந்தி சேனா மாநில இளைஞர் அணி தலைவர் காலித் கான், K.G ஹல்லி வியாபாரிகள் சங்க தலைவர் அய்யூப் கான், கர்நாடகா TKS இளைஞர் அணி தலைவர் முகமது காலித்கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், முஹம்மது யூசூப், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் N.அன்வர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெங்களூர் மாநகர நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK_KARNATAKA
02/12/2017

image

கர்நாடகா.நவ.30., பெங்களூரு, பாகலூர் மஜக கிளை டிசம்பர் 2  நடைபெறும் டிசம்பர் 6  போராட்டம் சமபந்தமன் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

கூட்டத்திற்கு  பாகலூர் கிளை செயலாளர் சகாப் தீன் அவர்கள்  தலைமை தாங்கினார். பாகலூர் கிளை பொருளாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.

மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் கூட்டத்தில் டிசம்பர் 2 செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்வது, மற்றும் டிசம்பர் 6 ஒசூரில் நடைபெறும் இரயில் நிலையம் முற்றுகை போரட்டத்தில் கர்நாடகா மஜக சார்பாக திரளான மக்களை திரட்டி கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் J.சல்மான் பெங்களூரு மாநகர பொருளாளர், S.B.S சாகுல் அமீது, A.அக்கிம் சேட் பெங்களூரு மாநகர துணைச்செயலாளர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK_KARNATAKA

image

image

பெங்களூரு.நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கர்நாடகா – பெங்களூரு மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில்,  மஜக பெங்களூரு நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்கள் கர்நாடகா KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடத்தினர்.

நிகழ்வின் போது கர்நாடகா KMMT தலைவர் ஜனாப். முக்தார் அஹமது அவர்களுக்கு K.M.J.பாபு (கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர்) பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.

உடன் மஜக கர்நாடகா பெங்களூரு மாநகர பொருளாளர் K.M.J.சல்மான் மற்றும் எலஹங்கா செயலாளர் ரஹமத்துல்லா, தேவனஹள்ளி செயலாளர் சாருக்  ஆகியோர் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_ IT_WING
#KARNATAKA
07-11-2017

Sign In

Reset Your Password

Email Newsletter