சட்டமன்றம்

image

வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக),
அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
12.01.18

image

சென்னை.ஜன.02.,  இன்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் அவரின் கீரின்வேஸ் சாலை இல்லத்தில் இன்று காலை11மணியளவில் சந்தித்தனர்.

அப்போது10ஆண்டுகளை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக தங்களின் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

இதில் ராஜிவ் படுகொலை வழக்கு கைதிகள், கோவை குண்டு வெடிப்பு கைதிகள், மாவோயிஸம், நெக்ஸ்லைட்டு, தமிழ் தேசியம் தொடர்பான வழக்குகளில்.தண்டனை பெற்ற கைதிகள் ஆகியோரையும் பட்டியலில் இணைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று 3 MLAக்களும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இதில் உள்ள சட்ட சிக்கல்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டல்கள் ஆகியவை குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவும், இக்கோரிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாகவும் முதல்வர் கூறினார்.

மேலும் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு 10 கோடி நிதி வழங்கியதற்கும் சி.பா. ஆதித்தனாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை பாடப்புத்தகத்தில் சேர்த்ததற்கும் முத்தலாக் குறித்து தமிழக அரசின் சார்பில் தெளிவாக முடிவெடுத்ததற்கும் 3 MLAக்களும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

மேலும் முத்தலாக் குறித்து மாநிலங்களவையிலும் அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டபோது நிச்சயம் எதிர்ப்போம் என்றும் அதை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புமாறு கோறுவோம் என்றும் முதல்வர் கூறினார்.

சிறைக்கைதிகள் சுமார் 1400 பேர் முன் விடுதலை செய்வது குறித்து தாங்கள் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் 3 MLAக்களும் முதல்வரை பாராட்டி சால்வை அணிவித்தனர்.

பிறகு வெளியே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது சிறைக்கைதிகள் விடுதலை குறித்து கேள்விகள் எழுந்தது தீவிரவாதிகள் என கூறப்பட்ட சாரு மஜீம்தார், தோழர் தியாகு, போன்றவர்களை பல மாநில அரசுகள் ஏற்கனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்திருப்பதை 3 பேரும் சுட்டிக்காட்டினர்.

அவர்கள் எல்லாம் வெளியில் வந்தால் நீங்கள் அவர்களுக்கு பொறுப்பேற்பீர்களா? என ஒரு நிருபர் கேள்வி கேட்டார். ஆம்! நாங்கள் பொறுப்பேற்போம் என்றனர்.

பிறகு மூன்று தலைவர்கள் சட்டத்துறை அமைச்சர் C.V. சண்முகம் அவர்களை சந்தித்து சிறைகைதிகள் விடுதலை குறித்து சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினர்.

அதுபோல் அமைச்சர் S.P. வேலுமணி அவர்களையும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டின் அவர்களையும் இது தொடர்பாக சந்தித்து பேசினர்.

இருளும் துயரமும் சூழ்ந்து சிறையில் வாடும் குடும்பங்களில் வாழ்வில் மகிழ்ச்சியும் வசந்தமும் பொங்க பிரார்த்திப்போம்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
02.01.18

image

image

image

நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொகுதி மக்களும் , அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து , கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
01.01.18

image

நாகை தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஜமாத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சகோதர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

அவ்வூர்க்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு ஜமாத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சிக்கல், பொராவாச்சேரி  ஊராட்சியில் மஜக கொடியை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, நாகை ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட விவசாயிகள் அணி துணை செயலாளர் ஜலாலூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், மற்றும் தமீஜூதீன், கிளை நிர்வாகிகள் சதாம், சகாபுதீன் உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
26.12.17

image

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம் பொரவச்சேரி, சிக்கல் ரேஷன் கடைக்களுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனடியாக வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு, மேற்கண்ட பொருட்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிறகு, ஆழியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2017_18) ரூபாய் 4.000.00 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கல்வெட்டு பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17.

image

சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.

இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன், M.தமிமுன் அன்சாரி MLA, கலெக்டர் சுரேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் மற்றும் அதிகாரிகளும், பொது மக்களும், மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.

அதன் பிறகு நம்பியார் நகரில் பஞ்சாயத்தார்கள் சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் பங்கேற்றனர்.

பிறகு, கீச்சாங்குப்பத்தில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அங்கு பள்ளிக் கூடத்தில் நடைப்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17

image

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.மீரான் தானாக முன் வந்து இராஜினாமா செய்ததின் பேரில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த நிலா சாதிக் அவர்களை ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள்  அல்லாபிச்சை, புளியங்குடி ஷாஜகான், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட தொண்டர் அணி செயளாலர் செய்யது அபுதாகிர், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மாஸ் காஜா, புளியங்குடி நகர செயளாலர், புளியங்குடி நகர துணை செயளாலர் ஷேக் முகம்மது, தென்காசி நகர செயலாளர் செய்யது அலி, தென்காசி நகர துணைச் செயலாளர் மைதின் பிச்சை ராசப்பா, தென்காசி நகர பொருளாளர் அம்ஜத் கான், அசன் கனி ஒன் காசி நகர துணை செயலாளர், முகைதீன் தென்காசி நகர மருத்துவ அணி மற்றும் வார்டு நிர்வாகிகள் , மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்.
25.12.17

image

நாகை. டிச.21., 2G ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வெளியானதும் நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA  அவர்களை பத்தியாளர்கள் சந்தித்து ஸ்பெக்ட்ரம்(2G அலைக்கற்றை) தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதில் அளித்தவர், கடந்த பத்து ஆண்டு காலமாக  இவ்வழக்கு நாடு முழுக்க கூர்ந்து கவனிக்கப்பட்து.

இந்த வழக்கை வைத்து திமுகவையும், திராவிட கட்சிகளையும் ஊழல் பின்னணி கொண்டதாக சித்தரித்து, திராவிட கட்சிகளை அழித்து விடலாம் என்று டெல்லியில் உள்ள சில தீய சக்திகள் திட்டமிட்டார்கள்.

இப்பொழுது தனி நீதிமன்றம் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் திரு.R.ராசா, திருமதி கனிமொழி MP உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்திருக்கிறது. பத்து ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு வழங்க பெற்றிருப்பது வரவேற்க்கதக்கது.

இதில் விடுதலை பெற்றவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின்  சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING.

image

சென்னை.டிச.20., மாணவர் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்தவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

வழக்கு விசாரனைக்காக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, ஊடக பிரிவைச் சேர்ந்த கார்த்திக்  ஆகியோர்ஆஜராகினர்.

விசாரனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் கோபி மற்றும் பிரசாத் உடன் இருந்தனர்.

செய்தி;
#ஊடக_பிரிவு
#மாணவர்_இந்தியா

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

மஜகவின் சார்பில் நானும், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அண்ணன் தனியரசு MLA அவர்களும் குமரி மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளையும், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரையும் பார்க்க சென்றிருந்தோம். அங்கே கருணாஸ் அவர்கள் வருவதாக கூறியிருந்தார், ஆனால் கடைசி நேரத்தில் வர இயலாமல் போய்விட்டது.

எங்களோடு வருகை தந்த மஜக சொந்தங்களோடு கடலோர பகுதிகளுக்கு சென்றப் போது, அங்கு நிலவிய கொந்தளிப்புகளை நேரில் கண்டோம்.

எங்கும் துக்கமயமாக இருந்தது, அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. வெவ்வேறு குரல்கள் ஒரே மொழியில் கதறின. அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம்.

தமிழக முதல்வர் உடனடியாக இங்கு வந்து இம்மக்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்; கேரளா அரசு கொடுத்தது போல, இங்கும் 20 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக கொடுக்க வேண்டும்; இறந்த மீனவர்களின் வீட்டுக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்; கடலுக்கு போகாத நாட்களை கணக்கிட்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும், என கோரிக்கைகளை அரசுக்கு வைத்துவிட்டு, உளவுத்துறை அதிகாரிகளிடமும் இதை மேலிடத்தில் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.

எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் விதமாகவும், மீனவர்களின் உணர்வுகளை மதிக்கும் விதத்திலும் முதல்வர் குமரிக்கு வருகை தந்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது ஆறுதல் தருகிறது. முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.

ஆனால், முதல்வர் போராட்டக் களத்திற்கு சென்று, பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், அது அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும்.

அவர் மக்கள் கோபத்துக்கு அஞ்சி தவிர்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பா.ஜ.கவிற்கும், மீனவர்களுக்கும் அங்கு பகிரங்கமாக பனிபோர் நடந்து வரும் நிலையில் எதற்கு வம்பு ? என இப்படி  நடந்துக் கொண்டாரா ? என்ற கேள்வியும் எழுகிறது.

அங்கு சென்ற முதல்வர் அவர்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் மீதும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அது பற்றி அவர் வாய் திறாக்காதது வருத்தம் அளிக்கிறது.

கிருஸ்துமசுக்கு முன்னதாக டிசம்பர் 22 தேதிக்குள், காணாமல் போன 700 மீனவர்களும்  திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை நிறைவேற வேண்டும். இல்லையேல் மீனவ மக்களின் கேள்விகளுக்கும், குமுறல்களுக்கும் யாராலும் பதில் அளிக்க முடியாது. நல்லதே நடக்க பிராத்திப்போம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
14/12/2017.

Sign In

Reset Your Password

Email Newsletter