அறிக்கைகள்

image

(மனதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் அறிக்கை..)

தமிழ்நாட்டின் அறிவு ஜீவிகளில் ஒருவராகவும், மிகச் சிறந்த பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்த #ஞானி அவர்கள் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

கடந்த ஜனவரி 11 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் அவரை சந்தித்து உரையாடினேன்.ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் அவரை நான் சந்திப்பதுண்டு ஆனால் அன்றைய தினம் அவர் மிக சோர்வாக இருந்ததை கண்டேன். அவரது மரணச் செய்தியை கேட்டதும் அந்த நிமிடங்கள்தான் கண்முன்னே தோன்றுகிறது.

பல பத்திரிக்கைளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் வாரந் தோறும் அரசியல் களத்தில் அதிர்வுகளை உருவாக்கியது.

அவர் சமரசமின்றி தனது கருத்துகளை எடுத்துறைத்து வந்தார். குறிப்பாக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும், மாற்று அரசியலுக்காக அவர் ஆற்றிய பணிகளும் அவருக்கு வரலாற்றில் சிறப்பான இடத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
15.01.2018

image

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை…)

இந்திய நீதித்துறையின் உச்சபட்ச தலைமை பீடத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அவர்களுக்கு எதிராக மூத்த அமர்வு நீதிபதிகள் செல்ல மேஷ்வர், ஜோசப் குரியன், ரஞ்சன் கோஜாய் மற்றும் மதன் பி.லோகூர் ஆகிய நால்வரும் கிளார்ந்தெழுந்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

இது நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடந்திராத நிகழ்வு.
ஒட்டுமொத்த நீதித்துறையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக ஜனநாயக விரோதமாக நடந்து வருவதை இந்த நால்வரின் பேச்சுக்கள் அம்பலப் படுத்திவுள்ளது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும், தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதிகளால் இந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டதில்லை. குற்றம் சுமத்தப்பட்டதும் இல்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் எப்போது மக்கள் மன்றத்தின் முடிவுக்காக விடப்பட்டு விட்டதோ அப்போதே தலைமை நீதிபதி தனது நம்பிக்கையை இழந்துவிட்டார். விளிம்பு நிலையில் உள்ள சாதாரண குடிமகன்கூட நீதிக்கான கடைசிப் புகழிடமாக நீதித்துறையையே நம்பி இருக்கிறான்.

இந்த நிலையில் நீதித்துறையின் உச்சபட்ச ஆதிகாரபீடமே கேள்விக்குறியாகி விட்ட நிலையில் தீபக்மிஸ்ரா அவர்கள் தனது பதவியில் நீடிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்பதை உணர்ந்து உடனடியாக அவர் பதவிவிலக வேண்டும்.அவர் பதவி விலகாவிட்டால் அவருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் உள்ள மறைமுக நெருக்கம் அம்பலமாகிப் போகும் என்பதையும் அவர் உணர வேண்டும்.

மேலும் இவர் தலைமையில் அளிக்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளையும் மறு பரிசீலனை செய்யவேண்டும்.

இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.01.2018

image

புதுகை. ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அறந்தாங்கி வர்த்தகர் சங்க அரங்கில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜலில் அப்பாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் முஹம்மது காலித், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஷாஜஹான், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் அப்துல் ரஜாக், அறந்தாங்கி நகர செயலாளர்  ஜகுபர் சாதிக், அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சைய்யது தாவூத், திருவரங்குளம் ஒன்றிய பெர்ருளாளர் முகமது அப்துல்லாஹ், கீரமங்களம் நகர செயலாளர் முகமது புர்கான், கீரமங்களம் நகர பொருளாளர் இராஜேந்திரன், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் சைய்யது அபுதாஹிர், அவுடையார் கோவில் ஒன்றிய பொருளாளர் முகம்மது குஞ்சாலி, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது உசேன், மணமேல்குடி ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி  ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து வழிமொழிந்து நிறைவேற்றினார்கள்.

தீர்மானங்கள்..

1) முத்தலாக் தடை சட்டம் கண்டனத்திற்குரியது..

மத்தியில் ஆளும் பா. ஜ. க அரசால்  மக்களவையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டம் இந்திய அரசியல் சாசனம் வழக்கியிருக்கும் உரிமையியல் சட்டத்திற்கு எதிரானது. 1500 ஆண்டுகளாய் நடைமுறையில் உள்ள முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் அல்லது குறைந்த பட்சமாக முஸ்லிம் பிரநிதிகள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் கண்டிக்கத்தக்கது இச்சட்டத்தில் குற்றம் நிரூபிக்கும் வழிமுறைகள் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி மற்றும் நிவாரணம் கிடைக்க எந்த உத்திரவதமும் இல்லை என பல குறைபாடுகளை கொண்டதாக உள்ளது.  அனைத்திற்கும்  மேலாக இந்திய சிவில் சட்டத்தை மத துவேஷ எண்ணத்தோடு கிரிமினல் குற்ற சட்டமாக மாற்றுவது கண்டனத்திற்குரியது.

2) 10 வருட சிறைவாசிகள் விடுதலை  தமிழக அரசுக்கு நன்றி…

மனிதநேய ஜனநாயக  கட்சி பொதுச்செயலாளர் மாண்புமிகு  சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்ஸாரி அவர்கள்  சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை பரிசிலித்து முன்னாள் முதல்வர் MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை  ஒட்டி தமிழக சிறைகளிள் உள்ள 10 வருடத்தை அடைந்த அனைத்து  சிறைவாசிகளையும் விடுதலை என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்ட  தமிழக முதல்வர் எ.பழனிச்சாமி அவர்களுக்கும் அவரின் தலைமையில் செயல்படும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

3) அறந்தாங்கி வார செவ்வாய் சந்தை வியாபாரிகளுக்கு  நிரந்தர தீர்வு வேண்டும்…

புதுக்கோட்டையின் இரண்டாவது நகரமாக இருப்பது அறந்தாங்கி, இங்கு இயங்கி வரும் அறந்தாங்கி வார சந்தை ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. தஞ்சை சத்திரம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வார சந்தை நிர்வாகம் இந்த இடத்தை முறையாக செப்பனிட்டு பராமரிக்கவில்லை.

நிரந்தர கடைகளை அமைத்துத்தரவில்லை. எனவே மாவட்ட வருவாய் நிர்வாகமும் தஞ்சை சத்திரம் நிர்வாகமும் இணைந்து அறந்தாங்கியில் அண்ணாசிலை முதல் இரயில் நிலையம் சாலை வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும், ஏழை தரைகடை வியாபாரிகள் பாதிக்காதவண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இதுவாரை உள்ள நிலைபோல தரைகடை வியாபாரிகளை அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது  அனைவருக்கும் நன்றி கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
01.01.2018

image

நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:-

MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பேசிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதை மஜகவின் சார்பிலும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் வரவேற்க்கிறோம்.

இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

அதுபோல இக்கோரிக்கையை நேர்மையாக அனுகிய சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .C. V. சண்முகம் அவர்களுக்கும், துணை நின்ற அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சட்டமன்றத்தில் எங்களோடு இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
        
இந்த விடுதலையால் சாதி, மத, வழக்கு பேதமின்றி அனைத்து கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.
     
இதை மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அரசு, குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கருணையோடும், கனிவோடும், மனிதாபிமானதத்தோடு பரிசிலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
  
இவ்வாறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

இச்சந்திப்பில் , தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S.அலாவுதின், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் , மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை. முபாரக் , மாவட்ட செயலாளர் செய்யது ரியாசூதின், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் ஹமீது ஜெஹபர், நாகூர் நகரச் செயலாளர் ஷேக் இஸ்மாயில் , நாகை நகர துணைச் செயலாளர் அப்துல் மஜீது ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
01.01.2018

image

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA மூவரும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை)

10 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம்.

முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்களிடம்  இதுப்பற்றி கூறியபோது கனிவுடன் பரிசீலிப்பதாக கூறியிருந்தார்.

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி சண்முகம் அவர்களிடமும் இது குறித்து தொடர்ந்து  வலியுறுத்தி வந்தோம். அவர்கள் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று (31.12.2017)திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், 60 வயதை கடந்த கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வோம் என மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கண்ணீரில் வாடிய ஆயிரக்கணக்கான குடும்பங்களிள் வாழ்வில் மாண்புமிகு  திரு.எடப்பாடியார் அவர்கள் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

 இதன் மூலம் அவர் வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறார்.

மனிதநேயத்துடன் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு உத்தரவிட்ட மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், இதற்கு எல்லா வகையிலும் துணை நின்ற சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.C.V.சண்முகம் அவர்களுக்கும், அதிமுக அரசின் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

“பொன் மனச் செம்மல்” டாக்டர் MGR அவர்களின் நூற்றாண்டு விழா இதன் மூலம் சிறப்படைந்திருக்கிறது.
மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி, மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் அரசு கருணை மிக்கது என்பதை நிரூபித்திருக்கிறது.

சட்ட மன்றத்தில் இக்கோரிக்கைக்கு  ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், களத்தில் தொடர்ந்து போராடிய தலைவர்களுக்கும், அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

(இதில் வழக்கு பேதமின்றி மேற்கண்ட தகுதிக்கு உட்பட்ட அனைவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்)

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_ MLA,
#உ_தனியரசு_MLA,
#கருணாஸ்_MLA.
31.12.2017

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை! )

முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அவருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் மசேதாவை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

இதை ஒரு குற்றவியல் வழக்காக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முஸ்லீம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் தலையிடுவதாகும்.

இவ்விசயத்தில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க கூடாது என வலியுருத்தியதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை .

முத்தலாக் விசயத்தில் முஸ்லீம் பெண்களின் உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்படும் வகையில் அதை கையாள்வோம் என்று ஜமாத்துகளும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் சொல்லிய பிறகும் மத்திய அரசு இவ்விசயத்தில் பிடிவாதம் பிடிப்பபதை ஏற்க முடியாது. மத்திய அரசு இச்சட்டத்தை திரும்பபெற வேண்டும். அல்லது அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தோடு கலந்து ஆலோசித்து உரிய திருத்தங்களோடு கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா, AIIM தலைவர் அசாதுதீன் உவைசி, ராஸ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் JPN யாதவ், முஸ்லிம்லீக்கை சேர்ந்த முஹம்மது பசீர், பிஜி ஜனதா தள உறுப்பினர் மஹதாப்  உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்விசயத்தில் ஜனநாயக சக்திகளோடு இணைந்து தொடர்ந்து போராடுவோம் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்.

இவண்:

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
29.12.17

திருவாரூர்.டிச.28., இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கூறியாதவது.

முத்தலாக் குறித்து மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வரைவுதிட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திரும்ப பெற வேண்டும்.

இது குறித்து அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து பேச வேண்டும்.

தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதசார்பற்ற கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்புக்கொண்டு தான் பேசி வருவதாகவும் கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்

image

நாகை தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஜமாத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சகோதர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

அவ்வூர்க்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு ஜமாத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சிக்கல், பொராவாச்சேரி  ஊராட்சியில் மஜக கொடியை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, நாகை ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட விவசாயிகள் அணி துணை செயலாளர் ஜலாலூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், மற்றும் தமீஜூதீன், கிளை நிர்வாகிகள் சதாம், சகாபுதீன் உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
26.12.17

image

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம் பொரவச்சேரி, சிக்கல் ரேஷன் கடைக்களுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனடியாக வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு, மேற்கண்ட பொருட்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிறகு, ஆழியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2017_18) ரூபாய் 4.000.00 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கல்வெட்டு பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17.

image

சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.

இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன், M.தமிமுன் அன்சாரி MLA, கலெக்டர் சுரேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் மற்றும் அதிகாரிகளும், பொது மக்களும், மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.

அதன் பிறகு நம்பியார் நகரில் பஞ்சாயத்தார்கள் சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் பங்கேற்றனர்.

பிறகு, கீச்சாங்குப்பத்தில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அங்கு பள்ளிக் கூடத்தில் நடைப்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17

Sign In

Reset Your Password

Email Newsletter