மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்

image

image

image

image

சென்னை.டிச.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி  நல்லெண்ண வருகை புரிந்தார்.

அப்பொழுது மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிளை சந்தித்து உரையாடினார்.

இந் நிகழ்வில் மஜக இணை பொதுச்செயலாளர் KM.மைதீன் உலவி, பொருளாளர் எஸ். எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் JS. ரிபாயி ரஷாதி, துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாப்தீன், மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA. தைமிய்யா, A. சாதிக் பாட்ஷா,  நாச்சிக்குளம் தாஜுதீன் மற்றும் அண்ணன் AS. அலாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்

image

image

image

சென்னை. டிச.15., தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் கட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டவரும், மிகச்சிறந்த  களப்பணியாளருமான அண்ணன் A.S.அலாவுதீன் அவர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி,
துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெயினுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா, சாதிக் பாட்ஷா, சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்சியில் இணைந்து தலைமை நிர்வாக குழுவி்ல் இடம் பெற்ற J.S.ரிபாய்  மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், சீனி முஹம்மது ஆகியோரும் பங்கேற்ற தலைமை நிர்வாக குழு இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது அதன் பிறகு இந்த இணைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஜக வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை  மாவட்ட நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை
15.12.17

image

சென்னை.டிச.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவரணி மாநில செயலாளர் தோழர். பார்த்திபன் அவர்களின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூன்_ரசீது அவர்கள் இன்று பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இறுதி சடங்கில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர் , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான் , மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது மற்றும் இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
13.12.17

image

image

சென்னை.டிச.13,. இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
#தா_பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்..

இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் M.M.பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
13.12.2017

image

image

சென்னை.டிச.11., தமிழகத்தில் 1984 ல் இருந்து பல சமுதாய மக்களின் சமூக போராளியாக சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் தென் சென்னை #சீனி_முஹம்மது அவர்கள் கடந்த மாதம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் நவம்பர் புரட்சி என்ற தலைப்பில்  மஜகவில் இணைத்துக் கொண்டார்.

அனைத்து இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பாக டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் தினத்தில் தலைநகர் டெல்லியில் தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய மாண்புமிகு நீதியரசர் M.கற்பக விநாயாகம் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு நீதியரசர் K.இராமமூர்த்தி அவர்களால் மக்கள் காவலர் விருது மஜக மாநில செயலாளர் தென்சென்னை J.சீனி முஹம்மது அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழா நிகழ்வில் தென் சென்னை மாவட்ட பொருளாளர் A. காதர் ஷரீப் அவர்கள் உடனிருந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த அடைந்த சீனி முஹம்மது அவர்களை வரவேற்க தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜியா, துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட இளைஞரனி செயலாளர் முஹம்மது கனி, ஆயிரம் விளக்கு 109 வட்ட செயலாளர் முஹம்மது அஸாருதீன் , மற்றும் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்_சென்னை_மேற்கு
11.12.17

image

image

image

image

திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்திற்கு காவல்துறை இதுவரையிலும் எந்தவொரு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.பாலகிருஷ்ணன் Ex.MLA,  அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கோட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., M.Com அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார்.

ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மரணத்திற்கு காரணமான வங்கியின் மேலாளர் மற்றும் அடியாட்களான ராஜா, வெங்கடபதி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற இழப்பு இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசும்,  தமிழக அரசும்  தொடர்ந்து தமிழ்நாட்டில் விவசாயிகள் பிரச்சினை , மீனவ சமுதாய பிரச்சனைகள் தீர்வு காணாமல் இருப்பதும்  வாடிக்கையாகிவிட்டது என்றும் மஜக சார்பில் கண்டனத்தை பதிவுசெய்தார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்வர் பாஷா,  மாவட்ட பொருளாளர் சையத் முஸ்தபா ஆகியோர் உடன் இருந்தனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பழ.நெடுமாறன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்கம்  பி.ஐயாக்கண்ணு , அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, பி.ஆர்.பாண்டியன், தமிழ்த்தேசப் பேரியக்கம் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்

image

image

image

image

கோவை.டிச.08., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும்  ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள் இயக்கங்களிலிருந்து  பலரும் இணைந்து வருகிறார்கள்.

அரசியல் பக்கமே வராதவர்களும் அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர்.

பல்வேறு இயக்கங்களிலிருந்தும் இளைஞர்களும், பெண்களும், பெரியவர்களும் இணைந்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து பொள்ளாச்சியிலிருந்து கோவை தெற்கு மாவட்ட தமுமுக முன்னால் பொறுப்புக்குழு செயலாளர் D.பாசித்,  முன்னால் SDPI நகர தலைவர் B.காதர்மீரான், M.சம்சுதீன், I.முகம்மது அனீபா, M.பரீத்பாபு, முன்னால் தமுமுக திருநீலகண்டர் கிளை செயலாளர் ஷேக்அலிகான், பொருளாளர் A.கலீல் ரஹ்மான், முகம்மதுசலீம், முகம்மது இஸ்மாயில் ஆகியோர் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

அதை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்டம் மத்தியபகுதி செல்வபுரம் 77 வது வார்டு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சிக்கந்தர், ஜுபேர் ஆகியோர் மாநில பொருளாளர் முன்னிலையில் தங்களை மஜக வில் இணைத்துக்கொண்டர்.

இந்நிகழ்வில் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர், மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட அணி நிர்வாகிகள்  பைசல், அப்பாஸ், அபு, செய்யது இப்ராஹீம், அக்பர், முஹம்மது சலீம், சம்சுதீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, முஸ்தபா உமர், மற்றும் பகுதி நிர்வாகிகள் பூ.காஜா, காஜாஉசேன், காதர், ஜமால், சமீர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
08.12.17

image

image

image

image

#தடையை_உடைத்த_மஜக.!

#பெரும்_எழுச்சியோடு_மக்கள்_திரண்டனர்…!!

#திணறிய_கோவை_ரயில்_நிலையம்..!!!

கோவை.டிச.06. கோவையில் டிசம்பர்6 அன்று மஜக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை பெரும் பரபரப்பாக மாறியது. காலையிலேயே கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் மஜகவினர் முழக்கங்கள் எழுப்பியபடியே மோட்டார் பைக்குகளில் இரயில் நிலையம் நோக்கி அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தனர். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை.

மஜக சார்பில் மாநகர் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத படவில்லை, பேனர்கள் வைக்கப்படவில்லை காரணம் தடையை மீறிய போராட்டம் என்பதால் காவல் துறை இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை, வெறும் துண்டு பிரசுரங்களும், போஸ்டர்களிலும் மக்களை உசுப்பினர்.

சொந்த சிலவில் தன்னெழுச்சியாக மஜகவினர் வாகனங்களை எடுத்து கொண்டு, பெரும் எழுச்சியோடு இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமை வகித்தார்.

இதில் தலைமையகத்தின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இது தவிர மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட துணைசெயலாளர் ABT.பாருக் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தடையை மீறிய போராட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட மஜகவினர் பெரும் எழுச்சியோடு பங்கேற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜக தொண்டர்கள் ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறியபோது காவல்துறை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இப்போராட்டத்தை மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணைசெயலாளர்கள் அக்பர், சபீர், அன்சர், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ABS.அப்பாஸ், மருத்துவஅணி மாவட்ட செயலாளர் அபு, துணைசெயலாளர் செய்யது இப்ராஹீம், சுற்றுச்சூழல் அணி மாவட்டசெயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது இப்ராஹீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இப்போராட்டத்தில் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, பாசித், முஸ்தபா உமர், பகுதி நிர்வாகிகள் ஜமால், காஜா உசேன், சமீர், பூ.காஜா, மற்றும் துணை நிர்வாகிகள்,  கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என தடையை மீறிய போராட்டத்தால் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக போராட்டத்தில் 350 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:-

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
06/12/2017.

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

கடந்த வருடம் இதே நாளில் (04/12/2017) சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன், அங்கு என்னோடு ஹாரூன், நாசர், மைதீன் உலவி, செல்லச்சாமி ஆகியோரும் இருந்தனர்.

மாலை 6 மணியளவில் தொலைக் காட்சிகளில் பரபரப்பான செய்தி ஒடியது. அப்பபோலோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வர பரபரப்பு தொற்றியது.

அந்த திருமண நிகழ்வு மாலை 7 மணியளவில் நடந்தது. அதற்கு மானாமதுரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி மாரியப்பன் வந்திருந்தார். கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறி, உடனே புறப்பட்டார்.

நேரம் ஆக, ஆக தொலைக்காட்சிகளில் விவாதங்கள் உருவாகிறது.

நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்தோம். தொலைக்காட்சிகள் என்னிடம் அலைப்பேசி வழியாக பேட்டி அடுத்து நேரலையாக ஒளிப்பரப்பினார்கள்.

அதுபோல பல தலைவர்களிடமும் நள்ளிரவு வரை பேட்டி எடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
அன்று இரவுப் பொழுது கழிந்து, காலை விடிந்ததும் பத்திரிக்கைகளிலும் இதுதான் தலைப்புச் செய்தி.

நாங்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று போராட்டத்தை அறிவித்திருந்தோம். தமிழக முதல்வரின் உடல் நலமும், அவர் மீண்டு வருவதும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அசாதாரணமான சூழலில் ஒரு போராட்டத்தை எப்படி நடத்துவது என்று ஹாரூணின் வீட்டில் நாங்கள் 5 பேரும் அவசரமாக ஆலோசித்தோம். சக நிர்வாகிகளிடமும் “வாட்ஸ்ஆப்” குழுமத்தில் கருத்து கேட்டோம்.

எல்லோரும் ஒரு அசாதரனமான நிலையில் போராட்டத்தை ரத்து செய்யலாம் என கூறினார். அதை ஏற்று தமிழக முதல்வரின் உடல் நலன் மற்றும் மருத்துவமணை செய்திகளை கருத்தில் கொண்டு டிசம்பர் 6 போராட்டம் ரத்து என்று அறிவித்தோம்.

மஜகவை பின்பற்றி அடுத்த 1 மணி நேரத்தில் மற்ற அமைப்புகளும் ரத்து செய்தன.

நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நான் மதுரையிலிருந்து விமானத்தில், சென்னை புறப்பட்ட தயாரானேன். இளையாங்குடியிலிருந்து மதுரை நோக்கி மைதீன் உலவி, செல்லச்சாமி ஆகியரோடு புறப்பட்டேன்.

மதுரை விமான நிலையத்தில் பீட்டர் அல்போன்ஸ், மனோகரன் MLA போன்றோரும் அதே விமானத்திற்காக காத்திருந்தார்கள். மூவரும் ஜெயலலிதா அம்மாவின் உடல்நிலை குறித்து கவலையோடு பேசிக் கொண்டோம்.

விமானம் சென்னையில் தரையிறங்கி, வெளியே வந்ததும் பத்திரிக்கையாளர்கள் அங்கு குழுமியிருந்தனர். முதல்வர் அம்மாவின் உடல் நலன் தேற பிராத்திப்போம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

நேரே அப்போலோ மருத்துவமணைக்கு சென்றேன். வழியெங்கும் மக்கள் கண்ணீரோடு கதறிக் கொண்டிருந்தார்கள். அப்போலோவை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் கூடியிருந்தனர்.

அப்போலோவில் நுழைந்ததும் இரண்டு அல்லது நான்காம் மாடி என நினைக்கிறேன். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தலைவர்கள் சோகத்தோடு நின்றிருந்தார்கள்.

சரத்குமார், தனியரசு, கருணாஸ் போன்ற தோழமை தலைவர்களும் இருந்தார்கள். மருத்துவமனையில் நிலைமை மோசாமாக இருப்பதை உணர முடிந்தது.

மாலை 4 மணியளவில் சசிகலா அம்மையார் அவர்கள் கலங்கிய கண்களுடன், அம்மா அவர்கள் இருந்த பகுதிக்கு சென்றுவிட்டு வந்தார்.

சற்று நேரத்தில் DGP, கமிஷ்னர், உளவுத்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர் நிலைமை பரபரப்பானது.

நானும், சரத்குமார், தனியரசு, கருணாஸ் ஆகியோரும் மிகுந்த வேதனையோடு அம்மா அவர்கள் இருந்த அறைக்கு வெளியே நின்றிருந்தோம்.

5 மணி அளவில் அமைச்சர்களும், அதிமுக தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அந்த பகுதியில் கூட, நாங்கள் திடுக்கிட்டோம், சரத்குமார் அழுதே விட்டார்.

கொஞ்ச நேரரத்தில் அதாவது மாலை 5:30 மணி இருக்கும் என நினைக்கிறேன். தந்தி டிவியில் முதல்வர் ‘ஜெயலலிதா உயிரிழந்தார்’ என்ற செய்தி வெளியானது. எல்லோரின் அலைப்பேசிகளும் அலறின. மருத்துவமனையில் அதே போன்ற நிலை தான் இருந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவும் அறிக்கப்படவில்லை. ஆனால் பலரும் கதறினர்.

சற்று நேரத்தில் அந்த செய்தி தவறு என தந்தி தொலைக்காட்சியில் பாண்டே அவர்கள் மறுத்துவிட்டார். அதன் பின்னால் பதட்டம் குறைந்தது. ஆனால், அவநம்பிக்கை நீடித்தது.

இரவு 9 மணி இருக்கும் நானும், தனியரசும், அங்கிருந்து புறப்பட்டு விடுதிக்கு வந்தோம். தொலைக்காட்சிகளை பார்த்தப்படியே இருந்தோம்.

இரவு 11 மணிக்கு அப்போலோவிலிருந்து போயஸ் தோட்டம் செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக செய்தி வெளியானது. நள்ளிரவு 11:30 க்கு முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தாக தொலைக்காட்சிகள் சோக செய்தியை கூறின. தமிழக வரலாற்றில் துயரங்களை வெளிப்படுத்திய செய்திகளில் அதுவும் ஒன்று. அவர் இறந்தது டிசம்பர் நான்காம் தேதியா ? அல்லது ஐந்தாம் தேதியா ? என்ற குழப்பம் உறுத்தியது. கண்கள் கலங்கியது.

விடுதியில் இருந்த நானும், தனியரசும் உடனடியாக புறப்பட்டு போயஸ் தோட்டம் சென்றோம். எங்களுக்கு முன்பாகவே கருணாஸ் அங்கு வந்துவிட்டார்.

கடுமையான கூட்டம் கண்ணீரோடும், கதறலோடும் நின்றிருந்தது. நாங்கள் அந்த வீதிக்குள் செல்லும்போது ஆழமான வேதனைகள் வாட்டியது.

ஒரு அதிமுக தொண்டர் என்னைப் பார்த்ததும் “அன்சாரி பாய்… நீங்க சபையில் பேசும்போது அம்மா… குலுங்கி குலுங்கி சிரிப்பாங்களே பாய்…” அம்மா இப்ப போய்ட்டாங்களே… என கதறினார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பல அதிமுகவினர் எங்களின் கரத்தை பிடித்து அழ தொடங்கி விட்டனர்.

அம்மாவின் உடல் போயஸ் தோட்டத்திற்கு வருவது தாமதாமானது. அதனால் அருகில் நண்பர் ஒருவரின் வீட்டில் நானும், தனியரசும், கருணாசும் கொஞ்ச நேரம் இருந்தோம். அந்த நண்பர் யாசீன் எங்களோடு சோகத்தை பகிர்ந்துக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அவரது உடல் 75 நாட்கள் பரபரப்போடு இருந்த அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் புறப்பட்டது.

நாங்கள் போயஸ் தோட்ட வாசலில் காத்திருந்தோம். அங்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தோம்.

ஒரு எழை தாய் அங்கு அம்மா…அம்மா…என்று கதறிக் கொண்டிருந்தார். யார் என்று விசாரித்தோம். ஜெயலலிதா அம்மா அவர்கள் வாகனத்தில் செல்லும்போது அந்த தாய் சாலையில் நின்று எப்போதும் கையசைப்பாராம்! ஒரு நாள் அவரை போயஸ் வீட்டுக்கு அழைத்து வேண்டிய உதவிகளை அம்மா செய்து அனுப்பினாராம் ! இந்த ஏழையை கெளரவித்த அம்மாவின் மரணச் செய்தியை தாங்க முடியாமல் அவர் நள்ளிரவின் அமைதியை கிழிக்கும் வகையில் அழுதுக்கொண்டிருந்தார்.

அம்மாவின் உடல் போயஸ் இல்லம் வந்ததும் எல்லோரும் கலங்கினோம்.

அந்த வீட்டுக்கு வந்து போன நினைவுகள் வாட்டியது. இனி எப்போது வரப்போகிறோம்? ஏன் வரப்போகிறோம்? என மனம் வலிக்க, வலிக்க அங்கிருந்து புறப்பட்டோம். அப்போது மணி விடிகாலை மூன்று.

அடுத்த நாள் விடிந்தது. நாடெங்கும் அம்மா அவர்களின் ஆளுமை குறித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சிகளை தாண்டிய சோகம் வெளிப்பட்டது. திமுக நண்பர்களே கலங்கினார்கள்.”அம்மா நீங்கள் ஆளக்கூடாது என்று தானே சொன்னோம்… வாழக் கூடாது என்று சொல்லவில்லையே என ‘வாட்ஸ் அப்’ களில் உருகினார்கள்.

மக்கள் சாரை, சாரையாய் ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மரணம் தமிழ் நாட்டு மக்களை சோகமயமாக்கியது..!

நானும், கட்சி நிர்வாகிகள் ஹாரூன், தைமிய்யா, சாதிக் உள்ளிட்டோர்களும், தனியரசும் ராஜாஜி ஹாலுக்கு வந்தோம். அங்கு ம.நடராஜன், கனிமொழி, பொன்.ராதாகிருஷ்ணன், T.ராஜேந்தர், டாக்டர். கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பின் பகுதி ஹாலில் உட்கார்ந்திருந்தனர். எங்களோடு நெரிசலில் CPM தலைவர் தோழர். G.ராமகிருஷ்ணன் அவரது சக தோழர்களோடு வந்திருந்தார்.

அப்போது தான் பிரதமர் வந்துவிட்டு போனார். நானும், தனியரசும், சரத்குமாரும் அவரது உடல் அருகில் உட்கார்ந்திருந்த அமைச்சர்கள் உள்ளிடோர்களோடு உட்கார்ந்தோம்!

ஒரே நாளில் சென்னையை நோக்கி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணமிருந்தனர். நாடு முழுக்க மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அஞ்சலி செலுத்த தலைவர்களும், அமைச்சர்களும் வந்துக் கொண்டேயிருந்தனர்.

கடைசியாக ராகுல் காந்தி வந்தார்!

4 மணியளவில் அம்மாவின் உடல் இராணுவ அரச மரியாதையுடன் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டது. அந்த நேரத்தில் உ.பி.முதல்வராயிருந்த அகிலேஷ் யாதவ் வந்து சேர்ந்தார்.

நான், உணவுத்துறை அமைச்சர் திரு.காமராஜ் அண்ணன், திரு.ம.நடராஜன் அண்ணன், திரு.திவாகரன் அண்ணன் ஆகியோருடன் பீரங்கி வண்டிக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது “அம்மாவுக்கு மிகவும் பிடித்த இளம் தலைவர் என்று” என்னை அமைச்சர் காமராஜ் அவர்கள் திரு.நடராஜனிடம் கூற அருகில் நின்ற திவாகரன் “உடனே இவரது, பேச்சு அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

அப்போது ம.நடராஜன் அவர்கள் “நீங்கள் அவர்களுக்கு ரொம்பவும் வேண்டியவங்க…எனவே ஊர்வலத்தில் முன்வரிசையில் அமைச்சர்களோடு செல்லுங்கள்” என்றார்.

ஊர்வலம் செல்லும் வழியெங்கும் அனைத்து தரப்பு மக்களும் கூடி நின்று அழுதனர். மெரினாவில் MGR சமாதிக்குள் நுழைய முடியவில்லை. அவர் அடக்கம் செய்யப்படும் இடத்தில், எங்களுக்கான இருக்கையில் யார், யாரோ உட்கார்ந்திருந்தனர்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு, நாடு போற்றும் வலிமையான ஒரு தலைவரை இழந்த வலியை உணர்ந்தது.

நானும், தனியரசும், கருணாசும் அங்கு உட்கார்ந்திருந்த அமைச்சர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு, விடுதியை நோக்கி நடந்தே சென்றோம்.

அம்மா அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் மீது மிகுந்த மரியாதை காட்டினார். என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு காட்டினார் அவற்றை மறக்க முடியவில்லை. அவரின் இழப்பை மஜக உணர்கிறது. அவர் மஜகவுக்கு கொடுத்த அரசியல் அங்கீகாரத்திற்க்காக என்றென்றும் அவரை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

அம்மா இப்போது எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். எப்படி தெரியுமா? “அம்மா மட்டும்…இந்நேரம் இருந்திருந்தால்…என்ற வாசகத்தின் மூலமாக!

இவண்,

#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
04/12/2017.

image

image

கடலூர்.டிச.3., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர மாணவர் இந்தியா துணைச் செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று (2.12.17)  காலை மாரடைப்பால் வபாத் ஆகிவிட்டார்கள்.

தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com அவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று அன்னாரின் தந்தை, தாய் மற்றும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

உடன் மாநில நிர்வாககுழு உறுப்பினர் J.S.ரிஃபாயி ரஷாதி, மாநில இளைஞர் அணி  துணைச் செயலாளர் N.அன்வர்பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்  செயலாளர் சிக்கந்தர் பாஷா, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், முஹம்மது யூசூப், ஷாஜகான், பாஷா, கடலூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
03.12.2017.

Sign In

Reset Your Password

Email Newsletter