மஜக விவசாய அணி

image

image

கீழக்கரை. டிச.09., இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு ,பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், வருகை தந்தார். 

தொண்டி, தேவிப்பட்டினம் , இராமநாதபுரம் சந்திப்புகளை முடித்துவிட்டு மாலை 6மணியளவில் கீழக்கரைக்கு வருகைதந்து முன்னாள் மாவட்ட செயலாளர் ஹபீப் அவர்கள் திருமணத்தில் பங்கேற்றார்.

அப்போது கீழக்கரையின் முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து மஜகவின் பணிகள் குறித்தும், நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் உரையாடினார்.

அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணை பொதுசெயலாளர் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோரும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ. எம். ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர்.

இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட நிர்வாகிகள் இலியாஸ்,  முகவை பீர், சோனப்பூர் அஜ்மல், செய்யாது இப்ராஹிம், அப்துல் கபூர், அப்துல் நசீர், செய்யது அபுதாஹிர், சுல்தான் சீனி அபுதாஹிர், ஹபீப் முகம்மது , தொண்டி முகம்மது ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்

image

image

image

image

திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்திற்கு காவல்துறை இதுவரையிலும் எந்தவொரு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.பாலகிருஷ்ணன் Ex.MLA,  அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கோட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., M.Com அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார்.

ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மரணத்திற்கு காரணமான வங்கியின் மேலாளர் மற்றும் அடியாட்களான ராஜா, வெங்கடபதி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற இழப்பு இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசும்,  தமிழக அரசும்  தொடர்ந்து தமிழ்நாட்டில் விவசாயிகள் பிரச்சினை , மீனவ சமுதாய பிரச்சனைகள் தீர்வு காணாமல் இருப்பதும்  வாடிக்கையாகிவிட்டது என்றும் மஜக சார்பில் கண்டனத்தை பதிவுசெய்தார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்வர் பாஷா,  மாவட்ட பொருளாளர் சையத் முஸ்தபா ஆகியோர் உடன் இருந்தனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பழ.நெடுமாறன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்கம்  பி.ஐயாக்கண்ணு , அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, பி.ஆர்.பாண்டியன், தமிழ்த்தேசப் பேரியக்கம் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்

image

image

image

தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_மத்திய_மாவட்டம்.
06.12.17

image

image

சென்னை.நவ.04., சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் P.R.பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நடிகர் கமல்ஹாசன், பேராசிரியர். டாக்டர். S. ஜனகராஜன் ஆகியோர் விவசாயிகளை சந்திக்ககூடிய பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினர்.

இதில் மஜக சார்பாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மாநில துணை செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
04.11.2017

image

image

image

கடலூர்.செப்.27., இன்று கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு இன்று வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பரங்கிப்பேட்டை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின், மாநில துணைச் செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் உள்ளிட்டோர் உடன் வருகை தந்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்று மூன்று இடங்களில் மஜக கொடி ஏற்றப்பட்டது.
பொதுச்செயலாளர் 
M. தமிமுன் அன்சாரி MLA  இரண்டு இடங்களிலும், மாநில செயலாளர் தஜூதீன் ஒரு இடத்திலும் கொடியை ஏற்றிவைத்தனர்.

கடைவீதிகளில் ஊர்வலமாக சென்ற போது ஆங்காங்கே பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் இடைமறித்து பொதுச்செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பிறகு பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் பொதுச்செயலாளர் அவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகளை மனம்திறந்து பாராட்டினர்.

மேலும் மத்திய NIA உளவுத்துறையால் பரங்கிப்பேட்டை பொதுமக்கள் அடிக்கடி தொந்தரவுக்கு ஆளாவதாகவும் புகார் கூறினர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவதாகவும் பொதுச்செயலாளர் அவர்கள் பதிலளித்தார்.

அதன் பிறகு மக்ரிப் தொழுகைக்கு பரங்கிப்பேட்டையின் பாராம்பரியத்தை எடுத்து கூறும் மீரா பள்ளிக்கு சென்றார். அங்கு முத்தவல்லிகளை சந்தித்து உரையாடினார்.

நிறைவாக கட்சி வளர்ச்சி சம்பந்தமாக நகர நிர்வாகிகளுடன் உரையாடினார். நகர அலுவலகம் திறப்பது, எல்லா வார்டுகளிலும் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, உறுப்பினர் சேர்ப்பது ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.

அங்கு கிரஸன்ட் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மரியாதை நிமிர்த்தமாக பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து உரையாடினார்.

இதில் ஒன்றிய செயலாளர் இலியாஸ், நகர செயலாளர் முகம்மது பாருக் (80564 18003), நகர துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹிம், ஹாசிம் சுல்தான் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.
27.09.17

image
image

image

image

image

image

கோவை.செப்.24., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் “பாஸிஸத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு எழுச்சி மிகு
பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

கோவை மாநகரம் முழுக்க மஜகவின் கொடிகளும், பேனர்களும், விதவிதமான சுவரொட்டிகளும் ஒரு மாநாட்டை நினைவூட்டும் வகையில் இருந்தது.

7 மணிக்கெல்லாம் வின்சென்ட் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்டிடங்களின் மாடிகளில் மக்கள் கூட்டம் குடும்பம், குடும்பமாக நின்று வரவேற்றது.

உணர்வுப்பூர்வமான தீர்மானங்களுடன் பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாய மக்களும், தேவர் சமுதாய மக்களும், முஸ்லிம் சமுதாய மக்களும், தலித் சமுதாய மக்களும் அண்ணன்-தம்பிகளாய் கூடி எழுச்சியை வெளிப்படுத்தியது.

இது கோவையில் மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்தது. சங்பரிவார அமைப்புகள் அந்த மண்ணில் பிளவுகளை ஏற்படுத்திய காலம் போய், பல்வேறு சமுதாய மக்களும் சகோதரர்களாக ஒரு திருவிழாவில் ஒன்று கூடுவது போல கூடியிருந்தது.

இந்த அரிய சாதனையை செய்த மஜகவை அனைவருமே பாராட்டினர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் பலத்த ஆரவாரங்களுக்கிடையே உரையாற்றினார்கள்.

அது போல மஜக துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மஜக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், தலைமை நிலைய பேச்சாளர் திருப்பூர் ஹைதர் அலி போன்றோரும் பாஸிஸ எதிர்ப்பு உரையை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு. பாருக், மன்னை.செல்லசாமி, மதுக்கூர். ராவுத்தர்ஷா ஆகியோரோடு, மாநிலத் துணைச் செயலாளர்கள் கோவை.பஷீர், தோப்புதுறை ஷேக் அப்துல்லா, ஈரோடு பாபு, விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் வானவில் காதர் ஆகியோரும் பார்வையாளர்களாக வருகை தந்து சிறப்பித்தனர்.

கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாலர் பதுருதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாருக், TMS.அப்பாஸ், PM.ரபிக், சிங்கை சுலைமான், அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக உழைத்து கோவையில் மாபெரும்  சமூக நல்லிணக்கத்தை கட்டிக் காக்கும் அற்புத பணியை செய்திருக்கிறார்கள்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்
24.09.17

image

image

சென்னை.ஆக.20., சென்னை விமான நிலையத்தில் இன்று விடிகாலை மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்லும் புனித பயணிகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விமான நிலையத்திற்கு வருகைதந்து புனித பயனிகளை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வடபழனி பள்ளிவாசல் தலைமை இமாம் தர்வேஸ் ரஸாதி அவர்கள் ” தக்பீர் ” எழுப்பி பயணிகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

உறவினர்களின் கண்ணீர் வழியும் தழுவல்களுக்கு பிறகு, பயணிகள் இறையில்லமாம் காபாவை தரிசிக்கப்போகும் உணர்ச்சிகரமான நிலையில் புறப்பட்டனர்.

தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் இவ்வருடம் புறப்பட்ட 8வது சவூதியா விமானத்தில் 300பேர் புறப்பட்டனர்.

நிறைவாக M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விமான நிலையத்தின் உட்பகுதிக்கு சென்று , நிர்வாக பணிகள் குறித்து பயணிகளுக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா? எனக் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அதிகாரிகளிடம் சேவை பணிகள் குறித்தும் ஆலோசனைகளை கூறினார்.

இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், அமீரக IT-Wing செயலாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தலைமையகம், சென்னை
20.08.17

image

image

கடலூர்.ஆக.20., இன்று கடலூர் மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் “மலரட்டும் மணிமுத்தாறு” என்ற திட்டம் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கூட்டு முயர்ச்சியில் துவங்கப்பட்டு, இன்று நடைபெற்று வருகிறது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் அன்வர் தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்
20.08.17

image

image

image

image

image

குடந்தை.ஆக.14., தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மஜக சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டசபையில் குரல் கொடுத்தார்.

மேலும் அவருடன், தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்ததோடு, இதுகுறித்து தமிழக முதல்வரிடமும் முறையிட்டனர். சட்டசபை வளாகத்தில் இதற்காக போராடி வரும் இயக்குநர். கெளதமனுடன் இணைந்து பேட்டியும் கொடுத்தனர்.

இச்சூழலில் பழ.நெடுமாறன், மணியரசன் மற்றும் இயக்குநர் கெளதமன் போன்ற தோழர்கள் கதிராமங்கலம் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இன்று (14-08-2017) கும்பகோணத்திற்கு வருகை தந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் எழுச்சியான வாகன அணிவகுப்புடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கதிராமங்கலத்திற்கு அழைத்து வந்தனர்.

மஜக சார்பில் மோட்டார் பைக்குகள் மட்டுமின்றி 100 க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

அனைத்து வாகனங்களின் பின்பகுதிகளிலும் மஜக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒட்டப்பட்ட “எங்கள் நிலத்தை திருடாதே” என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதுபோல் கார்களின் முன்புறத்தில் ” கதிராமங்கலம் காப்போம்” என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மஜகவின் நெய்வேலி ஆம்புலன்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை வாகனங்களோடு இணைந்து வந்துகொண்டே இருந்தது.

வரும் வழியெங்கும் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். நிலைமை உணர்ச்சிகரமாக மாறியது.

போராளி. பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்து போட திருச்சிக்கு சென்றதால், தங்களின் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

“காப்போம், காப்போம்”

கதிராமங்கலம் காப்போம்

“மீட்போம் , மீட்போம்”
மண்ணின் வளத்தை மீட்போம்

என்ற முழக்கங்கள் அதிர்ந்தன. மக்களின் ஒன்றுபட்ட குரல்கள் எழுச்சியை மூட்டின.

“பிறந்த மண்ணை சூரையாடி….
வாழும் உயிர்களை அச்சுறுத்தி…
பேசாதே…பேசாதே…”
முன்னேற்றத்தை பேசாதே…

என்ற முழக்கங்கள் கதிராமங்கலத்தில் திரண்ட மக்களை உசுப்பியது.

பிறகு ஊர் மக்கள் தங்கள் கண்ணீரையும், தண்ணீரையும்  காட்டினார்கள். ONGC நிறுவனத்தால் பாழ்பட்டுப் போன தங்கள் நிலத்தின் கதையை கதறலுடன் கூறினார்கள்.

பல தொலைக்காட்சிகள் நேரலையாக அனைத்தையும் ஒலிபரப்பி, இந்நிகழ்வுகளை தமிழர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றன.

மூன்று MLAக்களும் மக்களிடம் உரையாடினர். உங்களின் பக்கம் எப்போதும் நிற்போம் என்று உறுதி கூறி, ஆறுதல் கூறினர்.

பிறகு, மாதிரிமங்கலம் சென்று, நிலங்களையும், மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் ONGC நிறுவனத்தின் உடைந்து வெடித்த குழாய்களையும், மண்ணையும் பார்வையிட்டனர். மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

“மத்திய அரசே…மத்திய அரசே…
வேளும், வாளும் தூக்கி சுமந்த
தமிழர் கூட்டத்தை சீண்டாதே….”

“மக்கள் விரும்பாத திட்டங்களை
தமிழக மண்ணில் திணிக்காதே….
தமிழர் கோபத்தை சீண்டாதே….”

என்ற முழக்கங்கள் அங்கு எழும்பிய வண்ணம் இருந்தது. மாநில அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது! மத்திய அரசுக்கு பணியக்கூடாது என்பதை இன்று நடைபெற்ற வாகன ஊர்வலம் உணர்த்தியது.

மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை , முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று கட்சிகளும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காக்கவும் , விவசாய நிலங்களை பாதுகாக்கவும் புறப்பட்டு இருக்கும் இந்த பயணம் தொடரும் !

அனைவரையும் தோழர் மணியரசன் அவர்களும் , தோழர் குடந்தை அரசன் அவர்களும் போராட்ட குழுவின் சார்பில் அனைவரையும் ஒழுங்கு படுத்தினர்.

உடன் மஜக மாநில செயலாளர் H. ராசுதீன், நாச்சிக்குளம் தாஜுதீன், விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ் ஆகியோர் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தஞ்சை வடக்கு மாவட்டம்
14.08.17

image

image

தூத்துக்குடி.ஆக.13., இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக 12.08.2017 சனிக்கிழமை
மாலை 4 மணிக்கு திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அனிதா ராதாகிருஷ்னன் MLA அவர்கள்  தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி
தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் அவர்களும்,
மாவட்ட பொருளாளர்
அ.நவாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் எதிர்வரும் 16.08.2017  புதன்கிழமை காலை 10மணிக்கு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் ஏரலில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக  நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி (தெற்கு)
மாவட்டம்.
12.08.2017

Sign In

Reset Your Password

Email Newsletter