சிங்கப்பூர்

சிங்கப்பூர்

image

image

வேலூர்.செப்.11., வேலூர் (மேற்கு) மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஒரு மாதம் பரோலில் வந்துள்ள தோழர். பேரறிவாளன் அவர்களை  அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்கள் நேரில்  சந்தித்தார்கள்.

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது தனக்கு பரோல் கிடைக்க மிகுந்த உறுதுணையாக இருந்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தோழர். பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மிகுந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்கள்

பின் பேரறிவாளன்
தந்தையை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

பின்னர் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பரோல் கிடைக்க ஆவண செய்த தமிழக அரசிற்கு மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்தார், தோழர்.பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.

இந்த நெகிழ்வான சந்திப்பின் போது உடன் மாநில அவைத் தலைவர் S.S.நாசிர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் , மாநில செயற்குழு உறுப்பினர் A.சையத் அபுதாஹிர்,

மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி காஞ்சி தெற்கு  மாவட்ட செயலாளர் N.அன்வர், வேலூர் (மேற்கு) மாவட்ட நிர்வாகிகள்,
குடியாத்தம் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
11.09.2017.

image

( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி)

முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது .

சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது .

உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் .

இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் .

உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் .

M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

image

மனிதநேய ஜனநாயக கட்சி ஓராண்டை கடந்த நிலையில் பல வரலாற்று நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது. பதிவு செய்யப்படாத நிலையிலேயே, அரசியல் அங்கீகாரத்தையும், தேர்தல் வெற்றிகளையும் பெற்ற கட்சி தமிழகத்தில் மஜகவாகத்தான் இருக்கக் கூடும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தற்போது நெடிய உழைப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஈர நிலத்தில் விழுந்திருக்கும் விதையான மஜக, தற்போது வேலி அமைத்து வீரியமாக புறப்பட்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என மஜகவின் எழுச்சிமிக்க பயணத்தில் இணைந்திருப்போருக்கு இது ஒரு வசந்தகால செய்தியாகும்.

கட்சியை பதிவு செய்வதில் முனைப்புக் காட்டி பணியாற்றிய தலைமை நிர்வாகிகள் S.S.ஹாரூண் ரஷீத், மெளலா. நாசர், N.தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா ஆகியோருக்கும், ஜாவித், ஷமீம், அணீஸ் ஆகிய துடிப்புமிக்க இளம் சகோதரர்களுக்கும், இப்பணியில் உழைத்த இதர தலைமை நிர்வாகிகளுக்கும் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி ஜாவித் பலமுறை டெல்லிக்கு சென்று இப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இறைவன் நமது பணிகளை அங்கீகரிக்க பிராத்திப்போம்!

அன்புடன்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
08.06.2017

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தற்போது இறையருளால் அவரது உடல் நலம் மேம்பட்டு, மருத்துவமனையிலிருந்து அவர் விடுதிக்கு வந்துவிட்டார்.
இரண்டு வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அலைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

அவரிடம் பேச வேண்டிய கட்சி தொடர்பான செய்திகள் எதுவாயினும் கட்சியின் பொருளாளர்  SS.ஹாரூண்
ரசீது அவர்களை  தொடர்புக்கொள்ளவும்.

தேவையேற்படின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லான நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி ஆகியோரையும் தொடர்புக் கொள்ளுமாறும், தொகுதி சம்மந்தப்பட்ட விவகாரங்களுக்கு அவரது தனிச்செயலாளர் முபாரக் (9092020923) சட்டமன்ற உறுப்பினர் அலுவலக செயலாளர் சம்பத் (9361771714) ஆகியோரை தொடர்புக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாரகள்.

இவண்,
மஜக தலைமையகம்
22.04.2017

image

image

சிங்கப்பூர்.மார்ச்.07., சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) ஏற்பாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி முஸ்தபா சென்டரின் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது . சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் செயலாளர் Y.செய்யது யூசுப் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் .

இதில் சிங்கப்பூரில் செயல்படும் கடையநல்லூர் , தென்காசி , கீழக்கரை , நாகூர் , முத்துப்பேட்டை , பொதக்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர் .

தங்கள் ஊரை சேர்ந்தவர் என்ற பாச உணர்வோடு சிங்கப்பூர் வாழ் தோப்புத்துறை வட்டார மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து பாராட்டினர் .

இதில் சமூக ஆர்வலர்கள் , தொழிலதிபர்கள் , ஊடகத்துறையினர் என பலரும் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் அவர்கள் நாகையின் MLA ஆனதற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

தகவல்

மனிதநேய கலாச்சாரப் பேரவை. #MJK_IT_WING
சிங்கப்பூர் மண்டலம்
07.03.2017

image

சிங்கப்பூர்.மார்ச்.07., தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க சிங்கப்பூர் வருகை தந்துள்ள மஜக பொதுச்செயாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களுடன் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
சிங்கப்பூர் மண்டலம்

image

image

image

சிங்கப்பூரில் இன்று (06.03.2017) கவிமாலை சார்பில் ‘ நானும் – தமிழும் ’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்ச்சி ஆனந்தபவனில் நடைபெற்றது .

தமிழகத்திலிருந்து வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழச்சி.தங்கபாண்டியன் , பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உரையாற்றினர் .

நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்மொழி வளர்ச்சி , இலக்கியம் , கவிதை ஆகியன குறித்து கேள்வி – பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது .

நேயர்களின் கேள்விகளுக்கு மூவரும் பதிலளித்தனர் . உற்சாகம் , நகைச்சுவை , கிண்டல் , கைத்தட்டல் என நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை தோழர் . இறைமதி ஒருங்கிணைத்தார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

விடுமுறை நாள் அல்லாத திங்கள்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது .

தகவல் தொழில்நுட்ப அணி (MJK-IT WING)
சிங்கப்பூர் மண்டலம்

image

image

image

image

புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜஹாங்கீர் அவர்களின் “சிறகிருந்தால் போதும்…” நூல் வெளியீட்டு விழா இன்று 05-03-2017 சிங்கப்பூரில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கவிமாலை நடத்திய இந்நிகழ்வில் கோவை PSG கலை கல்லூரியின் முன்னாள் பேராசிரியை #ஜெயந்திஸ்ரீ_பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றார்.

சிங்கப்பூர் தொழில்அதிபர் S.M.அப்துல் ஜலீல், கவிமாலை காப்பாளர் மா.அன்பழகன், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் அல்ஹாஜ் பரியுல்லா, தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தலைவர் அரிகிருஷ்ணன்,  பெண்கூலின் பள்ளிவாசல் நிர்வாகக்குழு துணை தலைவர் அல்ஹாஜ் M.Y.முகம்மது ரபீக், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் மாறன் நாகரத்தினம், கவிஞர் பிச்சனிக்காடு இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்களுக்கு இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு (FIM) தலைவர் நாகூர் கெளஸ் அவர்கள் நிணைவு பரிசை வழங்க, தோப்புத்துறை (TMAS) சங்க தலைவர் தீன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

“மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றிய பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் நாகப்பட்டினத்திற்கும், தென்கிழக்காசியாவிற்கும் இடையில் இருக்கும் வரலாற்று தொடர்புகளையும், நாகப்பட்டினம் தொகுதி மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் செய்த தமிழ் இலக்கிய, இதழியியல் பணிகளையும் ஆதாரங்களுடன் எடுத்துக்கூற அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்துகொண்டே இருந்தது.

தனக்கும் சிங்கப்பூருக்குமான 25 ஆண்டுகால தொடர்பை விவரித்தவர் சிங்கப்பூர் தமிழர்களின் பாராட்டுகளையும் தட்டிச்சென்றார்.

மனிதநேயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும், இயேசு (ஈசா அலை), கெளதம புத்தர் ஆகியோரின் தடங்களிலிருந்தும், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளிலிருந்தும் தனக்கே உரியபாணியில் அழகாக எடுத்துக்கூறி அரங்கை வென்றெடுத்தார்.

அரசியல் சாராத, இலக்கிய-மனிதநேய இதழியியல் சொற்பொழிவாக அவரது உரை அமைந்ததாக அனைவரும் பாராட்டினர்.

தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய கலாச்சாரப் பேரவை
#MKP_IT_WING
சிங்கப்பூர் மண்டலம்

image

image

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (Federation Of Indian Muslim) 26 வது பொதுக் கூட்டம் சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது .

தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . 

இக்கூட்டத்தில் , கடந்த 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற  தொகுதியில் வெற்றி பெற்றதற்கு தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஹாஜி . சர்புதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் . அதன் பிறகு பென்கூலன் மஸ்ஜித் நிர்வாக தலைவர் ஹாஜி. முஹம்மது ரஃபிக் அவர்கள் சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (FIM) சார்பில் பொற்கிழி வழங்கி கெளரவித்து பாராட்டி சிறப்பித்தார்கள் . 

இந்நிகழ்வில் MES நிறுவனத்தின் தலைவர் ஹாஜி. அப்துல் ஜலில் , சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் ஹாஜி. முகம்மது கெளஸ் , துணைத் தலைவர் ஹாஜி . ஜெய்னுலாபுதீன் மற்றும் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK- IT WING)
சிங்கப்பூர் மண்டலம்
05.03.2017

image

image

தேனி. பிப்.28., தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய வளாகம் மற்றும் அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு,
ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

காவல் நிலைய அதிகாரிகளும், காவலர்களும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களும்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால்,
மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
தேனி மாவட்டம்.
28.02.2017

Sign In

Reset Your Password

Email Newsletter