புதிய கிளை

image

image

வேலூர்.டிச.11.,மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் கோபாலபுரத்தில் A.முபாரக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் கலந்துகொண்டார்.

ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் நகர கோபாலபுரம் 24 வது வார்டு மஜக புதிய கிளை உதயமானது.

இதில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தங்களை
மஜகவில் இணைத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் நகர பொருளாளர் V.முபாரக் அஹமத், நகர து செயலாளர் சலீம்,ஒன்றிய கிளை நிர்வாகி நதீம்,மற்றும் முபாரக், சித்திக், சாதிக், பிலால், அல்து, நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
குடியாத்தம் நகரம்
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
11.12.2017.

image

image

image

image

வேலூர் மே டிச,.10.குடியாத்தம் ஒன்றியம் ஜிட்டப்பள்ளியில்  மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் பைரோஸ் தலைமையில் நடைபெற்றது.

நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ்,மற்றும் ஆம்பூர் T.R.முன்னா ( எ) நஸிர் கலந்து கொண்டார்

இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் ஒன்றியம் ஜிட்டப்பள்ளி புதிய கிளை உதயமானது.

மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் மஜக கொடியை ஏற்றி வைத்தார்.

20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள்.

இதில் முன்னால் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்மு தீன்,  ஆம்பூர் நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹம்த், சரவணன், கலீம், அபுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
#மஜக_வேலூர்_மே_மாவட்டம்
#குடியாத்தம்_நகரம்
10.12.2017

image

image

திருப்பூர்.டிச.04.,  நேற்று திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைகூட்டமும், அனுப்பர் பாளையம் கிளை நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார்.

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்கள் மஜகவின் செயல்பாடுகள் குறித்தும்,  டிசம்பர் 6 இரயில் நிலைய முற்றுகை குறித்தும் விரிவாக பேசினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இளைஞர்களும், மனவாட்களும் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

இறுதியாக  அனுப்பர்பாளையம்
கிளை நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

செயலாளர் I.சாகுல்ஹமீத் அவர்கள், பொருளாளர்  M.யாசர் அவர்கள், துணை செயலாளர். M.அசாருதீன் அவர்கள், மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் டிசம்பர் 6 போராட்டத்தில் அதிக நபர்கள் கலந்து கொள்வது எனவும். விரைவில் வடக்கு பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
03.12.17

image

image

கோவை.நவ.30., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி ஆத்துப்பாலம் கிளையின் ஆலோசனை கூட்டம்  மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜாபர் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைச்செயலாளர் அப்துல் பஷீர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட
துணைச்செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், பகுதி பொருளாளர் காதர், துணை செயலாளர்கள், அபு, ஹாருண் ரஷீது மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆத்துப்பாலம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கிளை செயலாளர் J.முகமதுஇஷாக், கிளை பொருளாளர் H.ஷாஜஹான், துணை செயலாளர்கள் A.பைசல்ரஹ்மான் (எ) ராஜா, A.அல் அமீன், S.அப்சல் அன்சாரி, ஆகியோர் மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.11.17.

image

கத்தார்.நவ.29.,மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக கடந்த 25.11.2017 அன்று மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணைச் செயலாளர் K.M.பஷீர் அஹமத் தலைமையில் Sanaya 12ல் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை உருவாக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் மண்டல பொருளாளர் ஆயங்குடி யாசீன், மண்டல துணை செயலாளர் சகாப்தீன், மண்டல PRO வாஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மஜக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்களும் கலந்து கொண்டு எதிர்கால செயல் திட்டங்களை விளக்கினார்.

கீழ்கண்ட நிர்வாகிகள் தேந்தெடுக்கப்பட்டனர்.

கிளைச் செயலாளர்:
தாரிக் மதுக்கூர்
+97430939026

கிளை பொருளாளர்:
பாபு மயிலாடுதுறை
+97455349865

கிளை துணைச் செயலாளர்கள்:

ஜியா முத்துப்பேட்டை
+91 9965859538,

அப்துல்லாஹ் அறந்தாங்கி
+97430737838,

உறுப்பினர்கள்:
1.ஜாஃபர் கும்பகோணம்
+97477332120,

2. கலீல் நெல்லை
+97477145666,

3.முஜீப் மயிலாடுதுறை
+ 974 66314204,

4.சர்ஃபுதீன் மயிலாடுதுறை
+974 3015306,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகளுக்கு
கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:

#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை,
#MKP_கத்தார்_மண்டலம்.
29.11.2017

image

image

image

கிருஷ்ணகிரி.நவ.23., கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த ( 20.11.2017 ) அன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்ட்சியில் இருந்து விலகி சகோதரர் நாஸிர் தலைமையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில்  தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மண்டலம் S.M.ஜைனுல் ஆபிதீன், மாநில துணைச்செயலாளர்கள் J.M. வசீம் அக்ரம், பல்லாவரம் ஷஃபி, தலைமை செயற்குழு உறுப்பினர் A.சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கிருஷ்ணகிரி_மாவட்டம்.
20.11.17

image

image

image

image

கடலூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலப்பேட்டை கிளை சார்பாக புதிய அலுவலகம்     மற்றும் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் N.N.இப்ராஹிம்  திறந்து வைத்தார், கொடிகளை தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது.

நகர செயலாளர் பைஸில் முன்னில்லை வகித்தனர் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அஜீஸ் கான் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர் மற்றும் இளைஞர் அணி பொருலாளர் ஹியாத் மற்றும் நகர, ஒன்றிய மஜக மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் பஃகத் மற்றும் நபில்
நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
12.11.17

திருப்பூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டம் செரங்காடு மற்றும் காலேஜ் ரோடு கிளை கடந்த சில தினங்கள் முன்பு உதயமானது அதன் நிர்வாகிகள் விபரம் கீழ் வருமாறு.

கிளை செயலாளர் :
J. நஸ்ருதீன்
9994026552

கிளை பொருளாளர் :
A. மன்சூர்அலிகான்
9566810838

துணை செயலாளர் :
J அப்துல் ஹாக்கிம்
9843034886

இளைஞர்அணி செயலாளர்:
B. காதர்கான்
7708503155

மருத்துவ அணி செயலாளர்
M. முகமது ஆசிக்
9842456199

காலேஜ் ரோடு கிளை நிர்வாகிகள்

கிளை செயலாளர் :
சாகுல்
9087145106

கிளை பொருளாளர்:
ரியாஸ் அஹமது
9787553823

ஆகிய நிர்வாகிகள்
12-11-2017-அன்று நடந்த திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பரிந்துரைக்கபட்டு தலைமையால் நியமனம் செய்யபட்டுள்ளர்கள் என அறிவிக்கபடுகிறது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாநகர்_மாவட்டம்
14.11.17

image

image

image

image

image

தஞ்சை.நவ.12., தஞ்சை மாவட்டம் நிர்வாக ரீதியாக தஞ்சை வடக்கு, தெற்கு, மாநகர் என நிர்வாக ரீதியாக மூன்றாக பிரிக்கப்ட்டுள்ளது.

மமக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் மணவர்கள் இணைந்துள்ள நிவையில், இன்று 12/11/17 பேராவூரணியில் ம.ஜ.க அலுவலகத்தை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.

‌ECR சாலை சேதுபவாசத்திரத்திலிருந்து பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்ஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஆகியோரை ஏராளமான கார், பைக்களில் பேராவூரணி வரை ஊர்வலகமாக அழைத்து வந்தனர்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய தமிழக மக்கள் புரட்சி கழகம் கொள்கை பரப்புச் செயலாளர்  R.நீலகண்டன் பேசும்போது, சிறுபான்மையினர் அல்லது தலித்துகள் கட்சி தொடங்கினால் அவர்களது சமுதாயக் கட்சி என்கிறார்கள், மற்றவர்கள் ஆரம்பித்தால் அது பொதுவான கட்சி என்கிறார்கள். ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து சமுதாயத்தவர்களையும் ஜனநாயகம் காக்கும் வகையில் இணைத்திருப்பதால், மஜகவை அப்படி யாராலும் கூறமுடியவில்லை.

தமிழ் தேசியம், திராவிடம், தமிழ்நாட்டின் வாழ்வதாரம் ஆகியற்றிக்காக மஜக பொதுச்செயலாளர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என பாராட்டினர்.

அடுத்து வாழ்த்துரை வழங்கிய திராவிடர் விடுதலை கழக மாவட்ட நிர்வாகி சித.திருவேங்கடம் பேசும்போது, பெரியார் இயக்கங்களும், சிறுபான்மை இயக்கங்களும் எப்போதுமே தோழமையாக செய்ல்பட்டு வருகிறோம். இப்போது சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

அடுத்து பேசிய மெய்சுடர் பத்திரிக்கை ஆசிரியர் வெங்கடேசன் மனு நீதியா? சமூக நீதியா? என்ற போராட்டம் இப்போது  வெடித்திருக்கிறது. தமிழ்நாடு திருமூலர் காலத்திலிருந்தே, சமூக நீதிக்காக இயங்கி வருகிறது. அதுபோல சமூக நல்லிணக்கமும் தமிழ்நாட்டிலிருந்தே கட்டிக் காக்கப்படுகிறது என்றார்.

இறுதியாக மாணவர் இந்தியா நகர் செயலாளர் S.அஸாருதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் தஞ்சை தெற்கு, புதுக்கோட்டை மேற்கு, புதுக்கோட்டை கிழக்கு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்

image

புதுகை.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி பகுதியில் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி இன்று 05.11.17 ஞாயிறு அன்று மேலப்பாலம் மஜக கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஒலி முகம்மது, சையது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் முபாரக் அலி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய துணைச் செயலாளர் ஷாஜஹான், நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகரப் பொருளாளர் அப்துல் கரீம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது காலித் நன்றி கூறினார்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் செயலாளர் முகம்மது அலி ஜின்னா, பொருளாளர் அலீக் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் சேக் இஸ்மாயில், முகம்மது நஜார், மருத்துவ அணி செயலாளர் முஹம்மது கனி,
வர்த்தகரணி செயலாளர் முஹம்மது இம்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

#தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுகை_கிழக்கு_மாவட்டம்

Sign In

Reset Your Password

Email Newsletter