மஜக பொதுக்கூட்டம்

மஜக பொதுக்கூட்டம்

image

image

கத்தார்.ஜன.14., மனிதநேய கலாச்சார பேரைவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (12.01.18)  நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ், மண்டல துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின்,
PRO.வாஜீத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதில் பிற கட்சிகளில் இருந்து பல இளைஞர்கள் தங்களை மஜகாவில் இணைத்துக்கொண்டார்கள்.

இணைப்பு நிகழ்ச்சிக்கு, பின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர் வரும் பிப்ரவரி-15 அன்று கத்தாரில் MKP சார்பில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு தலைப்பு “திருப்புமுனை மாநாடு” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கத்தார் மண்டல MKP பணிகளை துரிதப்படுத்தி, போர்கால அடிப்படையில் செயல்பட சகோதரர் மீசல் சையத் கனி அவர்களுக்கு மக்கள் தொடர்பு செயலாளராக நியமனம் செய்வது என மண்டல செயலாளர் முன் மொழிந்ததை மண்டல நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்தனர்.

தகவல்;
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
12.01.2018

image

வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக),
அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
12.01.18

image

image

image

முகவை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்கள்  கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர்.

இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம்.
05.01.2018

image

image

image

image

திருவாரூர்.ஜன.5., திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் நேற்று (05-01-2018) வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில்
மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜமாஅத்துல் உலாம சபை மற்றும் அனைத்து ஜமாஅத் ஒருங்கினைந்த கூட்டமைப்பு சார்பாக
கண்டன பொதுக்கூட்டம்
நடைபெற்றது.

இக்கண்டன பொதுக்கூட்டத்தில்
அல்ஹாஜ் TMA  முஹம்மது இல்யாஸ் உலவி அவர்கள் தலைமைவகிக்க, ஜமால் ஷேக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு
உறுப்பினர் AS.அலாவுதீன்,
பழ.கருப்பையா போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சார்ந்த பல தலைவர்கள் மற்றும் மெளலவி S.பக்ருதீன் பைஜில் போன்ற  மார்க்க அறிஞர்கள் பங்கெடுத்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந் நிகழ்ச்சியில் 8  ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு  மஜக  தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் சந்திக்கும் முதல் மேடை எனபது குறிப்பிட தக்கது.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இறுதியாக  ஜலாலுதீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.
     
தகவல்;

#மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி  
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்.
06.01.2018

image

image

image

நாகை. ஜன.06., நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று 05.01.2018  வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சின்னக்கடை வீதியில் நாகை மாவட்ட #ஜமாத்துல்_உலமா சார்பாக பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இக்கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மெளலவி #JS_ரிபாய்_ரஷாதி அவர்கள் பங்கேற்று கண்டன பேருரை நிகழ்த்தினார்.

இதில் பல்லாயிரகணக்கோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர்  நாகை முபாரக், மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சகத்துல்லாஹ், ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், சாகுல் ஹமீது, ஜமீல், மிஸ்பாஹூதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்

image

நாகை தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஜமாத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சகோதர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

அவ்வூர்க்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு ஜமாத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சிக்கல், பொராவாச்சேரி  ஊராட்சியில் மஜக கொடியை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, நாகை ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட விவசாயிகள் அணி துணை செயலாளர் ஜலாலூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், மற்றும் தமீஜூதீன், கிளை நிர்வாகிகள் சதாம், சகாபுதீன் உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
26.12.17

image

சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.

இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன், M.தமிமுன் அன்சாரி MLA, கலெக்டர் சுரேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் மற்றும் அதிகாரிகளும், பொது மக்களும், மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.

அதன் பிறகு நம்பியார் நகரில் பஞ்சாயத்தார்கள் சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் பங்கேற்றனர்.

பிறகு, கீச்சாங்குப்பத்தில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அங்கு பள்ளிக் கூடத்தில் நடைப்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17

image

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.மீரான் தானாக முன் வந்து இராஜினாமா செய்ததின் பேரில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த நிலா சாதிக் அவர்களை ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள்  அல்லாபிச்சை, புளியங்குடி ஷாஜகான், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட தொண்டர் அணி செயளாலர் செய்யது அபுதாகிர், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மாஸ் காஜா, புளியங்குடி நகர செயளாலர், புளியங்குடி நகர துணை செயளாலர் ஷேக் முகம்மது, தென்காசி நகர செயலாளர் செய்யது அலி, தென்காசி நகர துணைச் செயலாளர் மைதின் பிச்சை ராசப்பா, தென்காசி நகர பொருளாளர் அம்ஜத் கான், அசன் கனி ஒன் காசி நகர துணை செயலாளர், முகைதீன் தென்காசி நகர மருத்துவ அணி மற்றும் வார்டு நிர்வாகிகள் , மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்.
25.12.17

image

image

image

image

image

வேலூர்.நவ.25. ,இன்று வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மஜக மாநில பொருளாளர்
எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும்,சிறப்பான நல்லிணக்க உரையை வழங்கினர்.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்கள்.

மஜக மாநில துணைச்செயலாளர் வசீம் அக்ரம் அவர்களின் வழி காட்டுதலில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிரூஸ் ஜமா அவர்கள் தலைமையில் மஜகவினர் மிகச்சிறப்பான பணிகளை செய்திருந்தனர்.

ஆம்பூரில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக கொடிகள் கட்டப்பட்டுருந்தது.

சென்னை_பெங்களூர் நெடுஞ்சாலை முழுக்க கருப்பு வெள்ளை கருஞ்சிவப்புகளால் அலங்கரிக்கப்பட்டு
பரபரப்பாக இருந்தது.

நகர செயளாலர் M.பிர்தோஸ் அஹமத் (எ) பித்து அவரகளின் வரவேற்புரையுடன், மிகுந்த உற்சாகத்தோடு நல்லிணக்க கூட்டம் தொடங்கியது.

பல்வேறு சமுதாய மக்களும் முதன்முறையாக இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உற்சாகமாக ஆம்பூரில் ஒன்று கூடியது பெரும் மனநிறைவை தந்தது.

மேடையின் முன்புறம் மட்டுமல்ல,
இடமும், வலதும் முன்னும், பின்னும் என ஆர்வமாக பொதுக்கூட்ட உரையை செவி மடுத்தனர்.

காரணம் இதே ஆம்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தீய சக்திகளால் பெரும் கலவரம் நடைபெற்றது இது அனைவரும் அறிந்ததே.

அதன் பிறகு பிரிந்த மக்களை மீண்டும் இணைக்க எந்த கட்சியும் எந்த தலைவர்களும் முயற்சி செய்யவில்லை.!

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று மனங்களுக்கிடையே ஒரு இணக்கம் ஏற்பட வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நல்லிணக்க நிகழ்வை ஆம்பூரை சார்ந்த தொழிலதிபர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்று மகிழ்ந்து
மஜகவுக்கு நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

ஆம்..
மஜக எடுத்த இந்த நல்லிணக்க பொதுக்கூட்டம்.

ஆம்பூரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கியுள்ளது.!

சிறப்புவாய்ந்த இந்த பொதுக்கூட்டத்தை வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் SMD.நவாஸ், Pm.ஷபியுல்லா , Ex.mc.sm.ஷாநவாஸ் , சையத் ஜாவித் ஆகியோர் சிறப்பாக
செய்திருந்தனர்.

T.R.முன்னா(எ) நஸிர் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.!

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
25.11.17

image

image

வேலூர்.நவ.15., ஆம்பூரில் நடைபெறவிருக்கும் மத நல்லிணக்க மக்கள் திரள் பொதுக்கூட்டம் சம்மந்தமாக ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆம்பூரில்  நடைபெற்றது.

இதில் மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் M. ஜஹீருஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத்,
மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நயீம், முஹம்மது முஸரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது, பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வரும் மாநில நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது போன்ற பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
14-11-2017

Sign In

Reset Your Password

Email Newsletter