மஜக போராட்டங்கள்

மஜக போராட்டங்கள்

image

image

image

image

நெல்லை.டிச.08., நெல்லை கிழக்கு மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் A.கலீலூர்ரஹ்மான்  தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்நிலையில் சில மணிநேரத்திற்க்கு முன்பு ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று கூரிய காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்தனர். அதையடுத்து நிர்வாகிகள் காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடையை மீரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹ்மது அவர்கள் கண்டன உரையாற்றினார்.

மேலும் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர்  அ.அப்துல் வாகித், 
இந்திய தேசிய லீக் கட்சியின்   மாவட்ட செயலாளர் நெல்லை ஹக்கீம், தலைமை நிலைய செயலாளர்  அப்துல் காதர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஜாகித் சிக்கி, ஆலியப்பா,    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் களக்காடு நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போரட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் S.ஷேக் இப்ராஹிம், y.வாஸிம் முபாரக், k.சுபேர், S.நவாப் அலி,T.A.முஹம்மது அலி இக்பால், B.K.மீரான் மைதீன் மூலக்கரைப்பட்டி உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் P.M.மக்தூம்கனி, மாலிக்,  யூசுப் கான், ஷேக் மைதீன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு அனைவரும் கைதாகினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_கிழக்கு_மாவட்டம் .
06.12.17

image

image

image

image

திருப்பூர்.டிச.08.,மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடத்தப்பட்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டிசம்பர்6 அன்று மாலை சரியாக 3 மணியாளவில் திருப்பூர் இரயில் நிலையம் முன்பு  நடைப்பெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் I.ஹைதர்அலி அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் M.காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் தலைமையகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை.பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

எழுச்சியோடு நடைபெற்ற
இப்போராட்டத்தை மாவட்ட துணைச் செயலாளர்கள் S.அக்பர் அலி, Eரஹ்மான், E.ஈஸ்வரன், வெங்கமேடு மீரான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபல் ரிஸ்வான்,
மாணவர் இந்தியா பொருளாளர் A.ஆஷிக் இக்பால், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் A.முஹம்மது அஸ்கர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் V.கார்த்திக், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் A.ஷேக்பரித், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் J.செளகத் அலி, மனித உரிமை அணி மாவட்ட துணைச்செயலாளர் ஊத்துக்குளி சாகுல் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

சகோதர சமுதாய உறவுகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் இறுதியில் மாவட்ட துணைச்செயலாளர் J.மீரான் அவர்கள்
நன்றியுரையாற்றினார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
06/12/2017.

image

image

image

image

image

தூத்துக்குடி.டிச.07., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாபர் மஸ்ஜீத் வழக்கில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்கக்கோரி நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டனஆர்ப்பாட்டம்
தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருலாளர் நவாஸ், மா.து.செயலாளர்கள் காதர்பாட்ஷா, நஜீப், மா.இ.அணி செயலாளர் ராபிக், மா.தொ.அணி செயலாளர் ராசிக் முசம்மில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தோழமை அமைப்புகளைச் சார்ந்த
அகமது இக்பால் (விசிக), சுஜித் (பு.இ.மு) அவர்களும் மஜகவின் அழைப்பை ஏற்று வருகைதந்து  தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர்.

மாலை 3.30 மணிக்கே மழைபெய்ய ஆரம்பித்த சூழ்நிலையிலும் 300க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டனர்.

இருதியாக தூத்துக்குடி நகர இளைஞரணி செயலாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தூத்துக்குடி_மாவட்டம்
06.12.17

image

image

image

திருச்சி.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி
டிசம்பர்6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று இரயில்  நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள், ஜனநாயக அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள்.

மஜக திருச்சி மாவட்ட செயலாளர்  இப்ராஹிம்ஷா தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளர் K.M.மைதீன் உலவி அவர்களும்,
தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர்
தோழர்.பெரியார் சரவணன் அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள்.

இதுதவிர மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மருத்துவ சேவை அணி மைதீன் அப்துல்காதர் உரையாற்றினார்கள்.

போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் R அஸ்ரப்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திருச்சிசேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் SM. ரபிக், சேக்தாவூத்  ஜம்ஜம் பஷிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் MJVS மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், இளைஞரணி செயலாளர்
தென்னூர் சதாம், MJTS செயலாளர் GK.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான் முன்னிலை வகித்தனர்.

மேலும் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா தர்கா, பீமநகர், அரியமங்கலம், காட்டூர், கிளை செயலாளர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள், உறுப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

தடையை மீறிய இரயில் நிலைய முற்றுகையில் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். இறுதியாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாவட்டம்.
06.12.2017.

image

image

image

திருவள்ளூர். டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்திய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் பாபர் மஸ்ஜீத் இடிப்பு ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் இழிவு என்றும், இனி பாபர் மஸ்ஜீத் மீட்பதில் உச்சநீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும்.டிசம்பர்6 நிகழ்வை சட்டம் இயற்றிய அம்பேத்கரின் மறைவோடு நீதியை புதைத்துவிட வேண்டாமென்று கூறினார்.

மஜக கொள்கை விளக்க அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் பாஸிச சக்திகளுக்கு சவால்விடும் வகையில் உரையாற்றினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போராட்ட களத்திற்கு வந்த தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் டிசம்பர்-6ல் பங்குபெற்று நான் உரையாற்றுவது எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும் தோள் கொடுத்து நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இந்தியர்கள் என்பதை நாடறிய உணர்த்துவோம் என்றார்.

மேலும் பாபர் மஸ்ஜீத் இடத்தை அதே இடத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்லாமல் சர்ச்சார் கமிட்டியின் இட ஒதுக்கீடு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இந்த நாட்டில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் சாத்தியப்பட்டது என்று சமூக நல்லிணக்கத்தை பறை சாற்றும் பல்வேறு அறிவு சார்ந்த கருத்துகளை பதிவு செய்தார்.

ஆவடி நகரத்தின் மக்கள் கூடும் பகுதியில் நடைப்பெற்ற  இப்போராட்டத்தை பல்வேறு போக்குவரத்து இடைஞ்சல்களுக்கு மத்தியில் மக்கள் ஆங்காங்கே குழுவாக நின்று கொண்டு உரைகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், துணைச்செயலாளர்கள் பக்ருதீன், மதுரவாயல் சுலைமான், மாணவர் இந்தியா கரிமுல்லா மற்றும் ஆவடி நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, நகர பொருளாளர் நாகூர் மீரான், தேவகாந்தி பாபு, சுல்தான் இஸ்ஹாக், பூவை நகர செயலாளர் யாசர் அரபாத் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவள்ளூர்_மேற்கு
06.12.17

image

image

image

image

வேலூர்.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி டிசம்பர்-6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள்.

நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர்கள் A. ஷாஹின்ஷா பாபு, J.M.வசிம் அக்ரம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு , CPI மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, CPI(M) மாவட்ட செயற்குழு அருள் சீனிவாசன், விசிக மாவட்ட பொருளாளர் நெற்றிக்கண் ஹபீஸ், அன்வர் CPI, தாலுக்கா செயலாளர் இந்துமதி CPI(M), இன்சாப் மாநில துணை செயலாளர் ஆலியார் அத்தாவுல்லா அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள்.

இப்போராட்டத்தில் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் M.ஜஹீருஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், P.M.ஷபியுல்லாஹ், சையத்ஜாவித், S.நயீம் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பேட், நகரத்தின் செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள்  என அனைவரும் கலந்துகொண்டனர்.

தடையை மீறிய இந்த இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மே_மாவட்டம்.
06.12.2017.

image

image

image

image

திண்டுக்கல்.டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் மத்திய அரசை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி வழங்கபடாததை கண்டித்தும், லிபரான் அறிக்கையின் படி தண்டனை வழங்கக்கோரியும்,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை11:30 மணியலவில்
மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமை ஏற்று இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையை எடுத்து கூறினார்.

இதில் கண்டன உரையாற்ற வருகைபுரிந்த மாநில நிர்வாகிகள் மண்ணை செல்லச்சாமி மற்றும் திண்டுக்கல் M.அன்சாரி இருவரில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி அவர்கள்
கூறும்போது பாபர் மசூதியின் வரலாற்றை பற்றியும் அது யாரால் கட்டப்பட்டது என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பார்வையாளர்கள் வியக்கும் வகையில் கண்டன உரையாற்றினார்.

இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்துக்கு சிறப்புரை ஆற்ற வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பாபர் மசூதி வழக்கில் முஸ்லீம்களுக்கு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வறுவதை சுட்டிக்காட்டி நியாயமான நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஒயாது என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்க்கு தடை விதித்த போது அந்த தடைக்கு எதிராக என் பாசமிகு சகோதரன் அன்சாரி அறிவிப்பை ஏற்று முதன்முதலில்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி காட்டியதை சுற்றிக்காட்டி, வரும் பொங்கல் திருநாளன்று மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை இந்த மூன்று கட்சிகளும் இணைந்து மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவேம் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்களும் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவுசெய்தனர்.

இப்போராட்டத்தில் M.A.S.உசேன் முகம்மது அவர்கள் தொகுத்து வழங்க இறுதியாக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா நன்றியுரை ஆற்றினார்.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்
06/12/2017

image

image

image

தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_மத்திய_மாவட்டம்.
06.12.17

image

image

image

image

#தடையை_உடைத்த_மஜக.!

#பெரும்_எழுச்சியோடு_மக்கள்_திரண்டனர்…!!

#திணறிய_கோவை_ரயில்_நிலையம்..!!!

கோவை.டிச.06. கோவையில் டிசம்பர்6 அன்று மஜக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை பெரும் பரபரப்பாக மாறியது. காலையிலேயே கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் மஜகவினர் முழக்கங்கள் எழுப்பியபடியே மோட்டார் பைக்குகளில் இரயில் நிலையம் நோக்கி அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தனர். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை.

மஜக சார்பில் மாநகர் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத படவில்லை, பேனர்கள் வைக்கப்படவில்லை காரணம் தடையை மீறிய போராட்டம் என்பதால் காவல் துறை இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை, வெறும் துண்டு பிரசுரங்களும், போஸ்டர்களிலும் மக்களை உசுப்பினர்.

சொந்த சிலவில் தன்னெழுச்சியாக மஜகவினர் வாகனங்களை எடுத்து கொண்டு, பெரும் எழுச்சியோடு இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமை வகித்தார்.

இதில் தலைமையகத்தின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இது தவிர மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட துணைசெயலாளர் ABT.பாருக் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தடையை மீறிய போராட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட மஜகவினர் பெரும் எழுச்சியோடு பங்கேற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜக தொண்டர்கள் ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறியபோது காவல்துறை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இப்போராட்டத்தை மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணைசெயலாளர்கள் அக்பர், சபீர், அன்சர், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ABS.அப்பாஸ், மருத்துவஅணி மாவட்ட செயலாளர் அபு, துணைசெயலாளர் செய்யது இப்ராஹீம், சுற்றுச்சூழல் அணி மாவட்டசெயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது இப்ராஹீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இப்போராட்டத்தில் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, பாசித், முஸ்தபா உமர், பகுதி நிர்வாகிகள் ஜமால், காஜா உசேன், சமீர், பூ.காஜா, மற்றும் துணை நிர்வாகிகள்,  கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என தடையை மீறிய போராட்டத்தால் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக போராட்டத்தில் 350 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:-

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
06/12/2017.

image

image

image

image

சென்னை. டிச.06.,  இன்று டிசம்பர் 6 மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலைய முற்றுகை போரட்டம் நடத்தப்பட்டது..

இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் ஜனநாயக அமைப்புகளின் பிரநிதிகள் கலந்துக் கொண்டனர்..

அதில் இந்து, கிறித்துவ, தமிழ் மக்களும் பரவலாக பங்கேற்றதன் மூலம் மஜக இப்போராட்டத்தை பொதுமைப் படுத்தியுள்ளது.

சென்னையில் பாபர் மஸ்ஜித்தை கட்டக்கோரி ஒரு ஐயப்ப சாமி பக்தர் மேடை எறி முழக்கமிட்டு, அனைவரையும் சிலிர்க்க வைத்தார்..

சென்னையில் பல சமூக பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் J.M.ஆரூன் Ex.Mp  அவர்களும் பங்கேற்றனர்..

சமூதாய ரீதியாக தேவர் சமுதாயம் சார்பில் அகில இந்திய பெடரல் பிளாக் தலைவர் ஆனந்த முருகன், யாதவ் சமுதாயம் சார்பில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைவர் இளங்கோ யாதவ் , கவுண்டர் சமுதாயம் சார்பில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, அவர்கள், தலித் சமுதாயம் சார்பில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்…

மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி , மாநில செயளாலர் என்.ஏ.தைமிய்யா, ஆகியோர் கண்டன உரையாற்றினார்..

மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷபி, மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன் , மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க தலைவர் அஸிம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் , துணைச் செயலாளர் பஷிர் அஹமத்,  தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  சைய்யது அபுதாஹிர் , முபாரக் , மத்திய கிழக்கு மாவட்ட செயளாலர் முஹம்மத் ஹாலித் , மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான் , மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது , ரவுப் ரஹிம் , அமிர் அப்பாஸ் , முன்னாள் வட சென்னை மாவட்ட பொருளாளர் தாஹா, தென் சென்னை (கிழக்கு) M.மொஹம்மத் இக்பால், M. அப்துல் கைய்யூம், A.ராஜா முஹம்மது, A.ஸ்டிபன், தென் சென்னை (மேற்கு) H.முஹம்மது கடாபி, A.காதர் ஷரீப், G. அப்துல் தமிம், மத்திய சென்னை மேற்கு I.முஹம்மது இப்ராஹிம்,
S.அன்வர் இப்ராஹிம், ஷாகுல் ஹமீது,  வட சென்னை மே M.அன்வர் , அக்பர், அப்துல் ரசாக் , அம்ஜத் உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் 1500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
# மஜக_மத்திய_சென்னை
06.12.17

Sign In

Reset Your Password

Email Newsletter