மாணவர் இந்தியா

மாணவர் இந்தியா

image

image

image

image

திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும்
நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர்கள் JS.ரிஃபாயி ரஷாதி, AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் கோவை பசீர், Er.சைபுல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, பல்லாவரம் சபி, ஈரோடு பாபு ஷாஹின்ஷா, புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர்.

மேலும் அணி நிர்வாகிகளான விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரோக்கியமான பல கருத்துக்களை கொண்டு கட்சியின் வளர்ச்சினை பற்றி நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
07.01.18

image

image

image

கடலூர்.ஜன.01.,  கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு நகர பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் J. நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டிசம்பர் மாத வரவு செலவு கணக்குகளை நகர பொருளாளர் I. முஹம்மது பைசல் அவர்கள் சமர்ப்பித்தார்.

இக்கூட்டத்தில் இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதவை கண்டித்து மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் லால்பேட்டை முஸரப் உரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் V.முஹம்மது ரியாஸ் அவர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தார்.  

இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கொள்ளுமேடு_நகரம்
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.

image

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.மீரான் தானாக முன் வந்து இராஜினாமா செய்ததின் பேரில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த நிலா சாதிக் அவர்களை ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள்  அல்லாபிச்சை, புளியங்குடி ஷாஜகான், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட தொண்டர் அணி செயளாலர் செய்யது அபுதாகிர், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மாஸ் காஜா, புளியங்குடி நகர செயளாலர், புளியங்குடி நகர துணை செயளாலர் ஷேக் முகம்மது, தென்காசி நகர செயலாளர் செய்யது அலி, தென்காசி நகர துணைச் செயலாளர் மைதின் பிச்சை ராசப்பா, தென்காசி நகர பொருளாளர் அம்ஜத் கான், அசன் கனி ஒன் காசி நகர துணை செயலாளர், முகைதீன் தென்காசி நகர மருத்துவ அணி மற்றும் வார்டு நிர்வாகிகள் , மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்.
25.12.17

image

சென்னை.டிச.20., மாணவர் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்தவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

வழக்கு விசாரனைக்காக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, ஊடக பிரிவைச் சேர்ந்த கார்த்திக்  ஆகியோர்ஆஜராகினர்.

விசாரனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் கோபி மற்றும் பிரசாத் உடன் இருந்தனர்.

செய்தி;
#ஊடக_பிரிவு
#மாணவர்_இந்தியா

image

image

image

திருவள்ளூர். டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்திய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் பாபர் மஸ்ஜீத் இடிப்பு ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் இழிவு என்றும், இனி பாபர் மஸ்ஜீத் மீட்பதில் உச்சநீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும்.டிசம்பர்6 நிகழ்வை சட்டம் இயற்றிய அம்பேத்கரின் மறைவோடு நீதியை புதைத்துவிட வேண்டாமென்று கூறினார்.

மஜக கொள்கை விளக்க அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் பாஸிச சக்திகளுக்கு சவால்விடும் வகையில் உரையாற்றினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போராட்ட களத்திற்கு வந்த தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் டிசம்பர்-6ல் பங்குபெற்று நான் உரையாற்றுவது எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும் தோள் கொடுத்து நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இந்தியர்கள் என்பதை நாடறிய உணர்த்துவோம் என்றார்.

மேலும் பாபர் மஸ்ஜீத் இடத்தை அதே இடத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்லாமல் சர்ச்சார் கமிட்டியின் இட ஒதுக்கீடு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இந்த நாட்டில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் சாத்தியப்பட்டது என்று சமூக நல்லிணக்கத்தை பறை சாற்றும் பல்வேறு அறிவு சார்ந்த கருத்துகளை பதிவு செய்தார்.

ஆவடி நகரத்தின் மக்கள் கூடும் பகுதியில் நடைப்பெற்ற  இப்போராட்டத்தை பல்வேறு போக்குவரத்து இடைஞ்சல்களுக்கு மத்தியில் மக்கள் ஆங்காங்கே குழுவாக நின்று கொண்டு உரைகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், துணைச்செயலாளர்கள் பக்ருதீன், மதுரவாயல் சுலைமான், மாணவர் இந்தியா கரிமுல்லா மற்றும் ஆவடி நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, நகர பொருளாளர் நாகூர் மீரான், தேவகாந்தி பாபு, சுல்தான் இஸ்ஹாக், பூவை நகர செயலாளர் யாசர் அரபாத் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவள்ளூர்_மேற்கு
06.12.17

image

image

image

சேலம்.நவ.29. உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரிக்கு தனது படிப்பை தொடர வந்த ஹாதியாவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா  தலைமையில் மஜக மற்றும் மாணவர் இந்திய நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட பொருளாளர் அமீர் உசேன், மாவட்ட துணைச் செயலார்கள் O.S.பாபு, சேட் ரஃபி, சையது முஸ்தபா, இளைஞரணி செயலாளர் அஸ்லம் கான், பகுதி நிர்வாகிகள் சாகுல், மொஹித் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சேலம்_மாநகர்_மாவட்டம்

image

image

image

கோவை.நவ.24., மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  மாநிலதுணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் P.M.A. பைசல், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, IKP மாவட்டசெயலாளர் அனீபா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.வருகின்ற டிசம்பர் 6 ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு மக்களை திரட்டும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் தனி தனியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்த கடிதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

2. டிசம்பர் 6 ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தை விளம்பரபடுத்த அனைத்து பகுதிகளுக்கும் சுவரொட்டி மற்றும் நோட்டீஸ்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வினியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது.

3.வருகின்ற 27.11.17 அன்று கிழக்கு பகுதியின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
23.11.17

image

image

image

image

சென்னை.நவ.15., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பாக  அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ் தற்கொலையில் ஆதாரங்கள் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசையும், காவல்துறையும் கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில், தோழர் அன்புவேந்தன், ஃபெலிக்ஸ், திருமுருகன் காந்தி, இயக்குனர் பா.ரஞ்சித் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, தமிழ்நாடு மாணவர் முன்னணி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக கண்டன உரையாற்றிய மாநில செயலாளர் அஸாருதீன் சோற்றுக்காக மதம் மாறவில்லை சுய கௌரவத்திற்காக மாறினேன் என்று மாணவர் வாக்குமூலம் கொடுத்து தற்கொலை செய்யும் அளவுக்கு கல்லூரி பேராசியர்களின் மனதில் மதவெறி புகுந்துள்ளது ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறினார்.

மேலும் இப்படி கல்வியிலும், ஆசிரியர்களும் ஒரு சேர்ந்து குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக செயல்படுவது எஜமான் மோடியின் திருப்தியை பெற்று பதவி சுகம் அடைய செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிவதாக குற்றம் சாட்டினார்.

ஜோசப் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது என்று பதிவு செய்தார். இதற்குள் இருக்கும் மத அரசியலை புரிந்துக் கொண்டு மாணவர்கள் போராட வேண்டுமென்றும், ஜோயல் பிரகாஷின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் ரவிக்குமார் மீது உயர்கல்வித்துறையும், மாநில அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர் இநந்தியாவும், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின்  கூட்டமைப்பு போராடும் என்றும் கூறினார்.

செய்தி தொகுப்பு ;
#ஊடக_பிரிவு_மாணவர்_இந்தியா

image

image

image

image

கடலூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலப்பேட்டை கிளை சார்பாக புதிய அலுவலகம்     மற்றும் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் N.N.இப்ராஹிம்  திறந்து வைத்தார், கொடிகளை தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது.

நகர செயலாளர் பைஸில் முன்னில்லை வகித்தனர் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அஜீஸ் கான் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர் மற்றும் இளைஞர் அணி பொருலாளர் ஹியாத் மற்றும் நகர, ஒன்றிய மஜக மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் பஃகத் மற்றும் நபில்
நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
12.11.17

image

image

image

image

கோவை.நவ.13.,கோவை மாநகராட்சி  86வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து பாம்புகள் வருவதாகவும் ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில நாட்களுக்கு முன் சமூக வலை தளங்களில் செய்தி வந்தது.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் அந்த பகுதியை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று 86வது வார்டு செயலாளர் அரபாத் அவர்களின் தலைமையில்  தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், 77வார்டு செயலாளர் இப்ராஹிம், துணைசெயலாளர் அலி, இப்ராஹீம், 78 வது வார்டு நிர்வாகிகள் சுபேர், இத்ரீஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சாக்கடைகளை தூர்வாரி மேல் தளங்கள் அமைக்கக்கோரி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
13.11.17

Sign In

Reset Your Password

Email Newsletter