நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக

நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக

image

image

image

image

திருவண்ணாமலை.டிச.17., திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் ஜமாத்தினர்களும் மற்றும் பிற கட்சிகளிலிருந்து விலகியும்  50க்கும் மேற்பட்டோர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக இறையூரில் இரண்டு இடங்களில் பொதுச்செயலாளர் அவர்கள் கட்சியின் கொடிகளை ஏற்றி வைத்தார்.

அதணைத் தொடர்ந்து செங்கத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் அவர்கள் மஜகவின் நகர அலுவலகத்தை திறந்து வைத்தார். இங்கும்  பொதுச்செயலாளர் முன்னிலையில் 25பேர்கள் மஜகவில் தங்களை இணைத்துகொண்டனர்.

நகர அலுவலக வாயிலில் மாநில துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.

பிறகு சமீபத்தில் விபத்தில் மரணமடைந்த செங்கம் ஒன்றிய துணை செயலாளர் இதாயத்துல்லா அவர்களுடைய இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய பொதுச்செயலாளர் அவர்கள் தலைமையின் சார்பில் நிதி உதவியை வழங்கினார்.

இந்நிகழ்வுகளின் போது துணை பொதுச்செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத் மாநில துணை செயலாளர் பல்லவரம் ஷபி மாவட்ட செயலாளர் ஹாஜா ஷெரீப், பொருளாளர் செய்யது முஸ்தபா, ஷபீர் மற்றும் அணைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்

image

image

image

image

சென்னை.டிச.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி  நல்லெண்ண வருகை புரிந்தார்.

அப்பொழுது மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிளை சந்தித்து உரையாடினார்.

இந் நிகழ்வில் மஜக இணை பொதுச்செயலாளர் KM.மைதீன் உலவி, பொருளாளர் எஸ். எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் JS. ரிபாயி ரஷாதி, துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாப்தீன், மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA. தைமிய்யா, A. சாதிக் பாட்ஷா,  நாச்சிக்குளம் தாஜுதீன் மற்றும் அண்ணன் AS. அலாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்

image

image

image

image

திருவண்ணாமலை.டிச.16., திருவண்ணாமலை மாவட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுகவில் முன்பு செயல்பட்டு கொண்டிருந்தவர்கள் 200 பேரும் இதர கட்சிகள்,  அமைப்புகளை சர்ந்த 50 பேரும் இன்று (16/12/2017) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி  முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

முன்னதாக 100க்கும் மேற்பட்ட கார்கள், பைக் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகளை திருவண்ணாமலையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

மாவட்டம் முழுவதிலிமிருந்து ஷபீர் அகமது தலைமையில் வருகை தந்தவர்களை மஜக மாவட்ட செயலாளர் ஹாஜா செரீப் வரவேற்று பேசினார்.

அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் R.K.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதை சட்டம் போட்டு, திட்டம்போட்டு தடுக்க முடியாது என்பது நடைமுறையில் தெரிந்துவிட்டது, பொதுமக்கள் சுயமறியாதை உணர்வுடன் செயல்பட்டு பணம் வாங்கமாட்டோம் என சத்தியம் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

கவர்னர் அவர்கள் கக்கூஸை ஆய்வு செய்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என மற்றொரு கேள்வியை எழுப்பினர்.

கவர்னர் தன் எல்லைக்குள் நின்று செயல்பட வேண்டும். அவர் வரம்பு மீறக்கூடாது. அவர் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கோப்புகளை பார்க்க வேண்டும். நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டும். மாறாக கக்கூஸை ஆய்வு செய்வது அவரது வேலை அல்ல என்றார்.

பாஜகவினர் வரம்பு மீறி பேசுவது பற்றி என்ன சொல்கிறீர்கள் என அடுத்த கேள்வியை எழுப்பினர்.

இது ஒன்றும் குஜராத் அல்ல, பொறுப்பான அதிகாரத்தில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி, மாவட்ட பொருளாளர் செய்யது முஸ்தபா மற்றும் மஜக மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்

image

image

image

சென்னை.டிச.16., அய்யா.பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய “உருவாகாத இந்திய தேசமும், உருவான இந்து பசிசமும்” என்ற நூல் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.

மேடை பேச்சாளர்களும், ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று விரும்பிகளுக்கும் மிகப்பெரிய ஆவண களஞ்சியமாக இந்நூல் தெரிகிறது.

இந்நூல் விற்ப்பனையை மஜக தலைமையகத்தில் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மஜக பொருளாளர் எஸ். எஸ். ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர்  மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் உள்ளிடயோர் பங்கேற்றனர்.

இந்நூலை பெற விரும்புவோர் தொடர்புகொள்க கபீர் – 04443514550

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை

image

image

image

விழுப்புரம்.டிச.16., இன்று திண்டிவனத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை – திண்டிவனம் பை-பாஸ் சாலையில் மஜக கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயற்குழுவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் கடந்து செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணை  பொதுச்செயலாளர்கள்
மண்ணை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர்  பல்லாவரம் ஷபி ஆகியோர் இருந்தனர்.

உடன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹீம், மாவட்ட பொருளாளர்
J. ரிஸ்வான், மாவட்ட துணை செயலாளர் S.R.ஆதம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் “திண்டிவனம்” M.K.ஷாஹூல் ஹமீத் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் திண்டிவனம் நகர செயலாளர் S. சையத் உசேன்,
நகர துணை செயலாளர்
H.அப்சர் பாஷா, நகர பொருளாளர் M.தமிமுன் அன்சாரி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் கலீம் பேக்,
நகர இளைஞர் அணி செயலாளர் V.கணேஷ் பாபு, நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் A .அமீர், S.இஸ்மாயில், நகர தொண்டர் அணி செயலாளர் ஆசிப்கான், மாணவர் இந்தியா பாசில், ரிபாஃயின், முகம்மது ஜப்பார்,  மற்றும மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விழுப்புரம்_மாவட்டம்
16.12.17

மனிதநேய ஜனநாயக கட்சியின்
இராமநாதபுரம் மாவட்டம்
நிர்வாக வசதிக்காக “கிழக்கு, மேற்கு ” என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
இராமநாதபுரம், திருவாடானை சட்டமன்ற தொகுதிகள் கிழக்கு மாவட்டமாகவும், முதுகுளத்தூர், பரமக்குடி சட்டமன்ற தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் இனி செயல்படும்.

மேற்கு மாவட்ட நிர்வாகிகள்:

A முகம்மது இல்யாஸ்
(மாவட்டச் செயலாளர்)
99651 33716

செய்யது இப்றாஹிம்
(மாவட்டப் பொருளாளர்)
9443279415

அப்துல் கபூர்
(மாவட்டத் துணைச் செயலாளர்)
94430 70030

கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் :

முகவை K. M. பீர்முகம்மது –
(மாவட்டச் செயலாளர்)
8056451079

முகவை.நசீர் அஹமது
(மாவட்டப் பொருளாளர்)
9486573014

ஹபீப் முகம்மது – கீழக்கரை
(மாவட்டத் துணைச் செயலாளர்)
979014O009

H.முஹம்மது
தொண்டி
(மாவட்டத் துணைச் செயலாளர்)
9659871786

M.செய்யது அபூதாஹிர்
R S . மங்களம்
(மாவட்டத் துணைச் செயலாளர்)
9865909396

I.சுல்தான் சீனி அபூதாஹிர்
தேவிபட்டிணம்
(மாவட்டத் துணைச் செயலாளர்)
9787482302

இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
16.12.17

image

image

image

சென்னை. டிச.15., தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் கட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டவரும், மிகச்சிறந்த  களப்பணியாளருமான அண்ணன் A.S.அலாவுதீன் அவர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி,
துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெயினுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா, சாதிக் பாட்ஷா, சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்சியில் இணைந்து தலைமை நிர்வாக குழுவி்ல் இடம் பெற்ற J.S.ரிபாய்  மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், சீனி முஹம்மது ஆகியோரும் பங்கேற்ற தலைமை நிர்வாக குழு இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது அதன் பிறகு இந்த இணைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஜக வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை  மாவட்ட நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை
15.12.17

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

மஜகவின் சார்பில் நானும், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அண்ணன் தனியரசு MLA அவர்களும் குமரி மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளையும், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரையும் பார்க்க சென்றிருந்தோம். அங்கே கருணாஸ் அவர்கள் வருவதாக கூறியிருந்தார், ஆனால் கடைசி நேரத்தில் வர இயலாமல் போய்விட்டது.

எங்களோடு வருகை தந்த மஜக சொந்தங்களோடு கடலோர பகுதிகளுக்கு சென்றப் போது, அங்கு நிலவிய கொந்தளிப்புகளை நேரில் கண்டோம்.

எங்கும் துக்கமயமாக இருந்தது, அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. வெவ்வேறு குரல்கள் ஒரே மொழியில் கதறின. அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம்.

தமிழக முதல்வர் உடனடியாக இங்கு வந்து இம்மக்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்; கேரளா அரசு கொடுத்தது போல, இங்கும் 20 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக கொடுக்க வேண்டும்; இறந்த மீனவர்களின் வீட்டுக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்; கடலுக்கு போகாத நாட்களை கணக்கிட்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும், என கோரிக்கைகளை அரசுக்கு வைத்துவிட்டு, உளவுத்துறை அதிகாரிகளிடமும் இதை மேலிடத்தில் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.

எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் விதமாகவும், மீனவர்களின் உணர்வுகளை மதிக்கும் விதத்திலும் முதல்வர் குமரிக்கு வருகை தந்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது ஆறுதல் தருகிறது. முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.

ஆனால், முதல்வர் போராட்டக் களத்திற்கு சென்று, பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், அது அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும்.

அவர் மக்கள் கோபத்துக்கு அஞ்சி தவிர்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பா.ஜ.கவிற்கும், மீனவர்களுக்கும் அங்கு பகிரங்கமாக பனிபோர் நடந்து வரும் நிலையில் எதற்கு வம்பு ? என இப்படி  நடந்துக் கொண்டாரா ? என்ற கேள்வியும் எழுகிறது.

அங்கு சென்ற முதல்வர் அவர்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் மீதும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அது பற்றி அவர் வாய் திறாக்காதது வருத்தம் அளிக்கிறது.

கிருஸ்துமசுக்கு முன்னதாக டிசம்பர் 22 தேதிக்குள், காணாமல் போன 700 மீனவர்களும்  திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை நிறைவேற வேண்டும். இல்லையேல் மீனவ மக்களின் கேள்விகளுக்கும், குமுறல்களுக்கும் யாராலும் பதில் அளிக்க முடியாது. நல்லதே நடக்க பிராத்திப்போம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
14/12/2017.

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

மஜகவின் சார்பில் நானும், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அண்ணன் தனியரசு MLA அவர்களும் குமரி மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளையும், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரையும் பார்க்க சென்றிருந்தோம். அங்கே கருணாஸ் அவர்கள் வருவதாக கூறியிருந்தார், ஆனால் கடைசி நேரத்தில் வர இயலாமல் போய்விட்டது.

எங்களோடு வருகை தந்த மஜக சொந்தங்களோடு கடலோர பகுதிகளுக்கு சென்றப் போது, அங்கு நிலவிய கொந்தளிப்புகளை நேரில் கண்டோம்.

எங்கும் துக்கமயமாக இருந்தது, அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. வெவ்வேறு குரல்கள் ஒரே மொழியில் கதறின. அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம்.

தமிழக முதல்வர் உடனடியாக இங்கு வந்து இம்மக்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்; கேரளா அரசு கொடுத்தது போல, இங்கும் 20 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக கொடுக்க வேண்டும்; இறந்த மீனவர்களின் வீட்டுக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்; கடலுக்கு போகாத நாட்களை கணக்கிட்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும், என கோரிக்கைகளை அரசுக்கு வைத்துவிட்டு, உளவுத்துறை அதிகாரிகளிடமும் இதை மேலிடத்தில் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.

எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் விதமாகவும், மீனவர்களின் உணர்வுகளை மதிக்கும் விதத்திலும் முதல்வர் குமரிக்கு வருகை தந்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது ஆறுதல் தருகிறது. முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.

ஆனால், முதல்வர் போராட்டக் களத்திற்கு சென்று, பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், அது அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும்.

அவர் மக்கள் கோபத்துக்கு அஞ்சி தவிர்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பா.ஜ.கவிற்கும், மீனவர்களுக்கும் அங்கு பகிரங்கமாக பனிபோர் நடந்து வரும் நிலையில் எதற்கு வம்பு ? என இப்படி  நடந்துக் கொண்டாரா ? என்ற கேள்வியும் எழுகிறது.

அங்கு சென்ற முதல்வர் அவர்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் மீதும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அது பற்றி அவர் வாய் திறாக்காதது வருத்தம் அளிக்கிறது.

கிருஸ்துமசுக்கு முன்னதாக டிசம்பர் 22 தேதிக்குள், காணாமல் போன 700 மீனவர்களும்  திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை நிறைவேற வேண்டும். இல்லையேல் மீனவ மக்களின் கேள்விகளுக்கும், குமுறல்களுக்கும் யாராலும் பதில் அளிக்க முடியாது. நல்லதே நடக்க பிராத்திப்போம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
14/12/2017.

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், யூதர்கள்  ஆகிய மூன்று சமூகத்தினரின் புனிதப் பகுதியாக கருதப்படும் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலை நகராக இருக்க வேண்டும் என்ற வரலாற்று போராட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மோசமான முடிவால் ஒரு திருப்புமுனையை சந்தித்திருக்கிறது.

இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் டெல் அவிவ் இனி மாநகராக மட்டுமே இருக்கும். இஸ்ரேலின் தலைநகராக  இனி ஜெருசலேம் தான் இருக்கும் என ட்ரம்ப் முட்டாள் தனமாக செய்திருக்கும் அறிவிப்பு உலகை பற்றியெறிய செய்திருக்கிறது.

அமெரிக்க தேர்தலின் போது யூதர்களின் வாக்குகளை பெற அவர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியிருக்கிறார்.

இதனால் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும்  யூத சியோனிஸ கொள்கை அரசியலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள்.

வாடிகன் போப் பிரான்ஸிஸ் ஜான்பால் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இப்பிரச்சனையை  இதற்கு மேல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கின்றார். ஜெருசலேம் விவகாரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறும் போது இதனால் மத்திய கிழக்கின் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் என்றிருக்கிறார்.

அதுபோல ரஷ்யா, வடகொரியா, சவுதி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஸ்வீடன், ஏமன், ஈராக், எகிப்து, துருக்கி, பொலிவியா, இத்தாலி, உருகுவே, உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவின் முடிவை கடுமையாக எதிர்த்திருக்கின்றன.

அமெரிக்காவின் முடிவு கவலையளிப்பதாக ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்திருக்கிறது.

கடந்த 1948-ல் நடைபெற்ற அரபு -இஸ்ரேலிய போரின்போது இஸ்ரேல் ஜெருஸலத்தை  ஆக்கிரமித்து. அதன் பிறகு முஸ்லிம்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் பல கெடுபிடிகளை யூத – இஸ்ரேலிய அரசு விதித்தது.

இவ்விஷயத்தில் உலக நாடுகள் இஸ்ரேலை ஒதுக்கி  வைத்திருக்கும் நிலையில்,  அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் சர்வாதிகார முடிவு நெருப்பை கொட்டியிருக்கிறது.

அல் – அக்ஸா எனும் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலம் அமைந்திருக்கும் ஜெருஸலம், அனைத்து மக்களின் ஆன்மீக பூமியாகவும் திகழ்கிறது.

அதனை ஒரு சார்பு உடைமையாக்க துடிக்கும் இஸ்ரேல், அமெரிக்க கூட்டு அராஜகத்தை உலகநாடுகள் ஒன்று சேர்ந்து கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாட்டு சபையில் உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு  அமெரிக்கா அதிபர் டிரம்பின் முடிவை நிராகத்திருப்பது சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாகும்.

மூன்றாம் உலக போருக்கு அமெரிக்கா சர்வாதிகாரி டிரம்ப் துணை போவதாக அமெரிக்காவிலேயே எதிர்ப்புகள் வலுத்திருப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு என்பதில் ஐயமில்லை.

வடகொரியா விசயத்திலும் டிரம்பின் வெறித்தனமான பேச்சுகளை யாரும் விரும்பவில்லை.

அமெரிக்காவை உலக அரங்கில் தலைகுனிய செய்யும் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களாலையே திருத்தப்பட வேண்டும்.

இந்தியா தனது மெளனத்தை உடைத்து, காந்தியடிகளின் வழியில், இந்தியாவின் மரபு சார் அரசியல் கொள்கைப்படி சுதந்திர பாலஸ்தினத்திற்கு ஆதரவாக தொடர்ந்து வெளிப்படையாக குரல் கொடுக்க வேண்டும்.

இவண் :
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி

Sign In

Reset Your Password

Email Newsletter